Vijay Sethupathy-Surya: கோலிவுட்டில் இப்போது வாரிசுகளின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. விக்ரம் மகனில் தொடங்கி அடுத்தடுத்த ஹீரோக்கள் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அதேபோல் விஜய் மகன் டைரக்ஷன் டிராக்குக்கு சென்று விட்டார்.
இவர்களுக்கு ஆடியன்ஸ் சப்போர்ட் இருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதி மகனுக்கு மட்டும் ஏன் இந்த வன்மம் என்று கேட்கும் அளவுக்கு இணையவாசிகள் அவரை வச்சு செய்து வருகின்றனர்.
இதற்கு காரணம் அவருடைய ஆட்டிட்யூட் தான். தற்போதைய 2k கிட்ஸ் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனாலும் லைம் லைட்டுக்கு வந்த பிறகு கொஞ்சம் அடக்கி வாசித்தால் தான் என்ன? vjs இதை மகனுக்கு சொல்லிக் கொடுக்கலையா? என்பது தான் நெட்டிசன்களின் கேள்வி.
அப்படி என்ன தான் செஞ்சாரு VJS வாரிசு.?
அப்படி என்னதான் நடந்துச்சு என்று பார்த்தால் சமீபத்தில் சூர்யா சேதுபதி நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கவனிக்கும்படியான பல விஷயங்கள் இருக்கிறது.
ஆனால் அதை தாண்டி படத்தின் நாயகன் விழாவில் பேசியது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு படத்துல நடிச்சதுக்கே இவ்வளவு பேசுறீங்களே தம்பி, இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு என்பது போன்ற கமெண்டை சோசியல் மீடியாவில் அதிகம் பார்க்க முடிகிறது.
அது மட்டும் இன்றி அவருடைய நடவடிக்கையும் பேசும் தோரணையும் கூட கொஞ்சம் ஓவரா இருக்கே. நம்ம ஸ்லீப்பிங் ஸ்டார் அஸ்வின் வரலாறு தெரியுமா கேட்டு தெரிஞ்சுக்கோங்க என்றும் கிண்டசெய்து வருகின்றனர்.
ஏற்கனவே படம் தொடங்கும் போது சூர்யா பேசியது ட்ரோல் செய்யப்பட்டது தற்போது படம் வருவதற்கு முன்பே அவர் கலாய்க்கப்படுகிறார் படம் வந்தால் என்ன நடக்குமோ.