Karthi : சினிமாவில் அப்பா சிவகுமார் மற்றும் அண்ணன் சூர்யா சினிமாவில் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த நேரம் குடும்பத்தில் தம்பியை காணவில்லை என்று பார்த்தபோது பருத்திவீரன் திரைப்படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்தார் கார்த்தி.
அதன்பின் மீண்டும் 2010 ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்குக்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதன் பிரஸ் மீட்டிங்கில் கார்த்திகை பார்க்கும் மக்கள் அனைவரும் பலக் கைத்தட்டல்களையும், பாராட்டுகளையும் அள்ளிக் குவித்தனர்.
சினிமாவில் சூர்யாவை போல தனக்கென ஒரு பேன் பேஜையும், ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கிய கார்த்தி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு கார்த்தியின் திரைப்படம் ரிலீஸ் ஆவது வழக்கம்.
ஒரு ஃபேமஸான நடிகர் என்றால் தொடர்ந்து படங்களில் இருந்து கொண்டே இருந்தால்தான் அவருக்கு மவுஸ் இருக்கும். அந்த வகையில் இவருக்கு எந்த திரைப்படமும் 2025 இந்த வருடம் திரையில் ரிலீசாகவில்லை.
ஒருவேளை வரிசையாக பல திரைப்படங்கள் கார்த்தி கைவசம் வைத்திருக்கிறாரா? இல்லை இந்த வருடம் படங்கள் எதுவும் அவருக்கு கைகுடுக்க வில்லையா என்ற கோணங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
கார்த்தி நடித்து முடித்த வாவாத்தியார் திரைப்படமும் இன்னும் வெளிவரவில்லை. அது திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயின் ஆக நடித்திருப்பதால் திரையில் இவர்களின் காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.