Actor Simbu: வாடிவாசல், வடசென்னை 2 படங்களின் ஆர்வம் எல்லாம் இப்போது ஓரம் போயாச்சு. சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியின் அறிவிப்பை தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதற்கான ப்ரோமோ சூட்டிங் அனைத்தும் முடிந்து விட்டது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. வடசென்னை யுனிவர்சில் உருவாகப் போகும் இப்படம் ராஜன் வகையறா கதை சம்பந்தப்பட்டது.
இப்படியாக பல தகவல்கள் பல நாட்களாக ஊடகங்களை சுற்றி வருகிறது. வெற்றிமாறன் கூட இதைப்பற்றி லேசு பாசாக சொல்லி இருந்தார். இந்நிலையில் தற்போது படம் பற்றிய முக்கிய தகவல் கசிந்துள்ளது.
10 நாளில் 10 கிலோ
அதாவது சிம்பு தற்போது வெற்றிமாறன் படத்திற்காக 10 கிலோ வரை தன்னுடைய எடையை குறைத்துள்ளாராம். அதுவும் 10 நாட்களில் இதை அவர் செய்திருக்கிறார். ஏற்கனவே அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து தான் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.
தற்போது இன்னும் எடையை குறைத்து விட்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அது மட்டும் இன்றி படம் எப்படி வரப்போகுது என்ற ஆர்வமும் ஒரு பக்கம் தீயாக இருக்கிறது.
ஏற்கனவே ப்ரோமோ பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு மாஸான காட்சிகளுடன் உருவாகி இருக்கிறது. அதை ஓவர்டேக் செய்யும் வகையில் படம் இருக்கும் என சிம்புவின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.