Vijay : விஜய்யை ஆரம்ப காலகட்டத்தில் சிறந்த நடிகராக்குவதற்காக விஜய் அப்பா சந்திரசேகர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். விஜய்யை நடிகராக்குவதற்காக எவ்வளவு பணம் வேணும்னாலும் இழக்க தயராக இருந்தாராம் சந்திரசேகர். தற்போது இவர் அளித்த நேர்காணல் ஒன்றில் இதைப்பற்றிய ஸ்வாரஸ்யமானக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது விஜய் நடிப்பில் வெளிவந்த முதல படம் “நாளைய தீர்ப்பு” மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியிலிருந்து என் மகனை மீட்டெடுக்க சந்திரசேகர் மற்ற நடிகர்களுடன் நடிக்க வைக்க அப்போதைய காலகட்டத்தில் உள்ள பிரபலமான நடிகரை எல்லாம் கேட்டேன்.
10 பைசா சம்பளம் வாங்காமல் விஜய்யை தூக்கி விட்ட நடிகர்..
எந்த நடிகரும் ஒத்துக்கொள்ளவில்லை. ஒருநாள் என் மனைவி விஜயகாந்த்திடம் கேட்டு பாருங்கள் என்று கூறினார். நானும் விஜயகாந்துக்கு போன் செய்து உங்ககிட்ட ஒரு உதவி வேணும், நன் உங்கள பக்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு குளிக்க போய்விட்டேன். குளித்து விட்டு வந்து பார்த்தால் என்னோட ரூம்ல விஜயகாந்த் உக்காந்திருந்தார்.
என்ன விஜி நீ வந்திருக்கன்னு கேட்டேன். அதற்கு, உதவி கேட்டு நீங்க என் வீட்டுக்கு வரக்கூடாது அப்படினு சொல்லிட்டு, என்ன உதவின்னு கேட்டாரு. நானும் விஷயத்தை சொல்லிட்டே இருக்கேன், கொஞ்சம் கூட யோசிக்காம எப்போன்னு மட்டும் சொல்லுங்கன்னு சொல்லிட்டாரு. 1 லட்சம் பணம் எடுத்து கொடுத்தேன் வாங்க மறுத்துட்டாரு.
உதவின்னு சொல்லிடீங்க அதனால இந்த படத்திற்கு நான் காசு வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அந்த மாதிரி உருவானதுதான் செந்தூரப்பாண்டி. இந்த படத்தை விஜயகாந்த் செய்து கொடுத்தது, விஜய்யை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது. இன்று விஜய் வளர்ந்து நிற்க காரணம் விஜயகாந்த். இந்த நன்றியை நாங்கள் என்றுமே மறக்கமாட்டோம் என சந்திரசேகர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விஜயகாந்த் போல ஒரு உயர்ந்த மனிதனை நாம் இனிமேல் பார்க்கமுடியாது. அவரை நாம் இழந்துவிட்டோம், அவர் முதலமைச்சர் ஆகியிருந்தால் மக்களை நல்வழியில் கொண்டு சென்றிருப்பார். தமிழ்நாடு அந்த பொற்காலத்தை இழந்து விட்டது எனவும் வருத்தப்பட்டு பேசியுள்ளார்.