Coolie : கூலி படம் வருகின்ற வியாழக்கிழமை ஆகஸ்ட் 14ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. ஒட்டுமொத்த திரையுலகமுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தப் படம் ஆயிரம் கோடி வசூல் அடிக்குமா என இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலாவதாக தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1213 ஸ்கிரீன்கள் இருக்கிறது. கூலி படம் தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் பான் இந்திய படமாக வெளியாகிறது. மேலும் சிங்கப்பூர் அமெரிக்கா, போன்ற வெளிநாடுகளிலும் பிரம்மாண்ட ஓபனிங் உடன் வெளியாகிறது.
ஆகையால் கிட்டத்தட்ட 6000-திற்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் தான் கூலி படம் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக ப்ரீ ரிலீஸ் புக்கிங்கில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் 16 கோடிக்கு கூலி படம் வியாபாரமாக இருக்கிறது.
கூலி ஆயிரம் கோடி அடிக்க சாத்திய கூறுகள்
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 63 கோடியை தாண்டி இருக்கிறது. பொதுவாக ஒரு படம் வெளியானால் 4 ஷோக்கள் மட்டுமே தரப்படும். ஆனால் கூலி படத்திற்கு சிறப்பு காட்சியையும் தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கிறது. இதனால் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
மேலும் படம் இரண்டு வாரங்களுக்கு நன்றாக ஓடினால் கிட்டத்தட்ட 300 கோடி வரை லாபம் கிடைக்கும். அதுவே படம் சூப்பர் டூப்பாராக இருந்தால் கண்டிப்பாக ஒரு மாதத்திற்குள் 700 கோடி வரை அசால்ட்டாக அடிக்கும்.
இது தவிர டிஜிட்டல், சாட்டிலைட் மற்றும் ஆடியோ ஆகிய உரிமைகள் 300 கோடியை தாண்டி விற்பனை ஆகி உள்ளது. இதனால் கூலி படம் ஆயிரம் கோடி அடிப்பது சாத்தியமான ஒன்று தான். ரஜினி என்ற மாஸ் நடிகருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆகையால் கூலி படத்தை மிகப்பெரிய வெற்றி அடைய செய்திடுவார்கள்.