Coolie: கோலிவுட்டில் முதல் ஆயிரம் கோடி படம் என்ற பெருமையை யார் தட்டி தூக்குவது என்பதுதான் இங்கு நடக்கும் பெரும் போட்டியாக இருக்கிறது. லியோ படத்திற்கு இப்படி ஒரு பேச்சு இருந்தது.
அதையடுத்து கங்குவா 1000 இல்ல 2000 கோடி அடிக்கும் என தயாரிப்பாளர் ஓவராக சவுண்டு விட்டார். கடைசியில் அந்த சவுண்டு தான் படத்தின் பின்னடைவுக்கு காரணமாக இருந்தது. படத்தில் ஓவர் இரைச்சல் ரசிகர்களை கடுப்பாக்கி படத்தின் வசூலையும் முடக்கியது.
அதை அடுத்து லோகேஷ், ரஜினி கூட்டணியின் கூலி 1000 கோடி தட்டி தூக்கும் என ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை பொங்கிக் கொண்டிருக்கின்றனர். இது சாத்தியமாஎன்று கேட்டால் நிச்சயம் சாத்தியம் தான்.
அடக்கி வாசிக்கும் சன் பிக்சர்ஸ்
அதனால் தான் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு நடிகரை அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ். அதற்கும் மேலாக நாகர்ஜுனா அமீர்கான் இருப்பது வசூலுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் இப்போது தயாரிப்பு தரப்பு கொஞ்சம் பதட்டத்தில் இருக்கிறது. அதேபோல் பிரமோஷன் கூட அதிக அளவில் செய்யாமல் கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றனர். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
அதாவது ஆகஸ்ட் 14 கூலி வெளியாகும் நாளில் தான் வார் 2 படமும் ரிலீஸ் ஆகிறது. ஹிரித்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்துள்ள படத்திற்கு வணிகரீதியாக பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
கூலி படத்தை ஒப்பிட்டு பார்க்கையில் இங்கு கல்லாகட்டினாலும் தெலுங்கு ஹிந்தி பக்கம் வசூல் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது. ஏனென்றால் அங்கு வார் 2 படத்திற்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது. அதனால் தான் கூலி பட டீம் கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றனர்.
ஆனால் இறுதி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். முதல் ஷோ முடிந்து விமர்சனங்கள் வருவதை பொறுத்து எந்த படம் வசூல் ராஜா என்பது தெரியவரும். பார்க்கலாம் கூலி வசூல் வேட்டையாடுமா என.