தமிழ் சினிமா உலக அளவில் கவனம் பெறும் நிலையில், சில திரைப்படங்கள் 1000 கோடி வசூலை அடையும் என எதிர்பார்ப்பு ஏற்படுத்தின. மெகா ஹைப்போடு வந்த மாஸ் படங்கள் வசூலில் வென்றாலும், 1000 கோடி கனவுக்கு கை கூடாமல் கனவாகவே மிஞ்சின. இதில் சில படங்களை பார்க்கலாம்.
தளபதி விஜயின் லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்ட ரிலீஸ். பிரம்மாண்ட எதிர்பார்ப்பு, பாக்ஸ் ஆபிஸில் கலக்கினாலும் ₹600 கோடி வரை மட்டுமே சென்றது. 1000 கோடி கனவு அருகே கூட வராமல், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாகவும் பிரமாண்ட எதிர்பார்ப்புடன் வெளியானது. PS1 ₹500 கோடியை தாண்டியதும், PS2 ₹350 கோடியில் முடிவடைந்ததும், ஹைப்பை மிஞ்சவில்லை. 1000 கோடி கனவுக்கு இது தெளிவான ஏமாற்றமே ஆகிவிட்டது.
கூலியோட நிலைமை
கமல்ஹாசன், லோகேஷ் கூட்டணியில் வந்த விக்ரம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. Action, Emotion, Universe Connect என அனைத்தும் இருந்தாலும் 1000Cr கனவுக்கு வேகமாக ஓடியது, ஆனால் முடிவில் ₹430 கோடியே வசூலித்தது.
2.0, ரஜினிகாந்த் நடித்த சைபர்-சைஃபை படமாக இந்திய சினிமாவின் விஷுவல் அதிசயமாக பதிவானது. ₹650 கோடியைத் தாண்டி, இன்றுவரை 1000 கோடி கனவுக்குச் சமீபமாக சென்ற ஒரே தமிழ் படம் இதுவே.
கங்குவா சூர்யா நடித்திருக்கும் பிரமாண்ட பாண்டிய கால படமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆரம்ப வசூல் சாதாரணமாக இருந்தும், ₹200 கோடிக்கு மேல் தான் பாக்ஸ் ஆபிஸ் நிறைவு. 1000 கோடி கனவு கனவாகவே முடிவடைந்தது.
பிரமாண்ட ஹைப் மற்றும் பெரிய நட்சத்திரங்களுடன் வந்தாலும், இந்த 5படங்களும் 1000 கோடி கனவுக்கு நெருங்க முடியவில்லை. இந்நிலையில் கூலி படமும் 1000 கோடி வசூலிக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.