Kalanithi Maran : இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூலி படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. ஒரு படம் வெளியாவதற்கு முன்பாகவே ஆடியோ, சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விற்கப்பட்டுவிடும். அந்த வகையில் கூலி படமும் பெரிய தொகைக்கு விற்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ப்ரீ புக்கிங்கிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இதற்கு காரணம் ரஜினியின் படம் என்பதால் தான். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் இந்த படத்தை பயங்கரமாக செதுக்கியிருக்கிறார். நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான் என்று ஒரு மிகப்பெரிய பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
இந்த சூழலில் கலாநிதி மாறனுக்கு ரஜினி தரப்பில் இருந்து ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க சம்பளம் எதுவுமே ரஜினி பேசவில்லையாம். ஏனென்றால் இதற்கு முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
கலாநிதி மாறனுக்கு ரஜினி வைத்த செக்
அதுமட்டுமல்லாமல் ஜெயிலர் 2 படத்தையும் தயாரித்து வருகிறார் கலாநிதி மாறன். மேலும் ஜெயிலர் வெற்றி பெற்ற போது ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கியிருந்தார். இதனால் ஆரம்பத்தில் கூலி படத்திற்கு 150 கோடி சம்பளம் ரஜினிக்கு பேசப்பட்டிருக்கிறது.
ஆனால் இப்போது ஃப்ரீ பிசினஸ் 500 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகி இருக்கிறதாம். ஆகையால் படம் வெளியானால் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூல் அடிக்கும். இதனால் இன்னும் 50 கோடி சம்பளத்தை ஏற்றி ரஜினி தரப்பிலிருந்து 200 கோடி கேட்கிறார்களாம்.
ஒரே அடியாக 50 கோடிக்கு அதிகமாக கேட்டதால் கலாநிதி மாறன் ஷாக் ஆகிவிட்டாராம். ஆனால் கடந்த முறையே காரை பரிசாக கொடுத்த நிலையில் கண்டிப்பாக கூலி படம் ஆயிரம் கோடி வசூல் செய்தால் மிகப்பெரிய கிப்ட் கொடுப்பார். அதோடு ரஜினி கேட்ட சம்பளத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறாராம்.