Coolie : எங்கு பார்த்தாலும் இப்போ கூலி படத்தை பற்றிய செய்திகள்தான் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு லோகேஷ் திறமையாக தன் படத்தை பிரபலப்படுத்தியுள்ளார் என்பதே உண்மை. இந்த படத்தை தயாரித்த “சன் பிக்சர்” ரஜினியை மட்டுமே நம்பி இந்த படத்தை எடுத்துள்ளார்களாம். ஆனால் இந்த படத்தை அதற்கு தகுந்தாற்போல எடுத்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ரஜினியை விட ரிஸ்க் எடுத்தது லோகேஷ்தான்.
இந்த படத்தில் இவர்கள் போட்ட பட்ஜெட்டை விட அதிகமாகி வசூல் வந்தால் மட்டுமே இவர்கள் தலை தப்பும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அந்தவகையில் எவ்வளவு கலெக்சன் இதுவரை செய்துள்ளது என்பதை பற்றி வலைப்பேச்சு பிஸ்மி தற்போது கூறியுள்ளார்.
கூலி பாக்ஸ் ஆபீஸ், பிஸ்மி போட்ட கணக்கு..
இந்த படத்தில் நடித்ததற்காக ரஜினிக்கு 150கோடி சம்பளம், நாகார்ஜூனாவிற்கு 10 கோடியும், உபேந்திராக்கு 4 கோடியும், சத்யராஜுக்கு 5 கோடியும், சௌபின்-க்கு 1 கோடியும், ஸ்ருதிஹாசன் 3 கோடியும், ஒரு பாடலுக்காக பூஜா ஹெக்டே 3 கோடியும், அமீர்கான் 20 கோடியும், அனிருத் 15 கோடியும் பெற்றிருக்கிறார்கள் இப்பட நடிகர்கள்.
இதற்கு அடுத்து மற்ற கதாபாத்திரங்களுக்கு 13 கோடியும், பப்ளிசிட்டி பன்றதுக்காகவே 20 கோடியும், மேக்கிங் செலவு 60 கோடியும் மொத்தமாக 355 கோடிக்கு செலவு செய்து எடுத்துள்ளார்களாம்.
இப்போது இது செய்துள்ள வசூல், “நெட்பிலிக்ஸ்” நிறுவனம் டிஜிட்டல் ரைட்ஸை 125 கோடிக்கு வாங்கியுள்ளது. சாட்லைட் ரைட்ஸ் மதிப்பு 75 கோடி. கூலி படத்தின் ஓவர்சீஸ் பிசினெஸ் 86 கோடி. தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் “ரெட் ஜெயண்ட்” மூலியமாக 100 கோடி பிசினஸ் செய்துள்ளது. கர்நாடகா தியேட்டரிகல் ரைட்ஸை “AV மீடியா” என்கிற வினியாகஸ்தர் 25 கோடிக்கு வாங்கியுள்ளார்.
அடுத்ததாக தெலுங்கு தியேட்டரிகல் ரைட்ஸை “ஏசியன் சினிமா“ என்ற நிறுவனம் 43 கோடிக்கு வங்கியுள்ளார்கள். கேரளா தியேட்டரிகல் ரைட்ஸை “HM அஸோஸியேட்ஸ்” என்ற நிறுவனம் 15 கோடிக்கு வாங்கியுள்ளார். ஆடியோ ரைட்ஸ்-க்கான மதிப்பு 30 கோடி, வட இந்திய தியேட்டரிகல் ரைட்ஸ் மதிப்பு கிட்டத்தட்ட 30 கோடி அதனால் மொத்தமாக இதுவரை கூலி படத்தின் வியாபாரம் 530 கோடி.
இதுவரை கூலி படம் தன் பட்ஜெட்டை தாண்டி 175 கோடியை வசூல் செய்துள்ளது. படம் ரிலீஸ் ஆகி கண்டிப்பாக 1000 கோடியை தொட்டு விடும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ரஜினியை நம்பி இருக்கும் சன் பிக்சர் கண்டிப்பாக வசூலில் மிதக்க போகிறது இவ்வாறு வலைப்பேச்சு பிஸ்மி தற்போது கூலி பட “பாக்ஸ் ஆபீஸ்“ கலெக்சன் பற்றி கூறியுள்ளார்.