15 நாட்களில் தக் லைஃப் கலெக்ஷன்.. கர்நாடகாவில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா.? – Cinemapettai

Tamil Cinema News

Kamal : கமல், மணிரத்னம் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படம் தான் தக் லைஃப். பொதுவாகவே ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பது வழக்கம் தான்.

ஆனால் அவர்கள் ஏமாற்றத்தை கொடுத்தது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. அந்த வகையில் தக் லைஃப் படமும் விமர்சன ரீதியாக பெரிய அடி வாங்கியது. இதனால் வசூலிலும் மிகவும் மந்தமாக இருக்கிறது.

மேலும் கமல் பேச்சால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் தக் லைஃப் படத்திற்கு கிட்டத்தட்ட 30 கோடி நஷ்டம் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

15 நாட்களில் தக் லைஃப் செய்த வசூல்

இந்த சூழலில் படம் வெளியாகி கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை இந்திய அளவில் வெறும் 47 கோடி மட்டுமே வசூல் செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் தக் லைஃப் படத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த படத்தை மணிரத்னத்துடன் இணைந்து கமல் தான் தயாரித்திருந்தார். அதிக லாபத்தை கொடுக்கும் என்று நினைத்த கமலுக்கு இது பெரிய ஏமாற்றம். தயாரிப்பாளராக இருக்கும்போது ஒரு படம் லாபத்தையும், ஒரு படம் நஷ்டத்தையும் கொடுப்பது சாதாரணம் தான்.

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் கமலின் ராஜ் கமல் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தை கொடுத்தது. ஆனால் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய நஷ்டத்தை தான் தக் லைஃப் கொடுத்ததாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.