15 வருஷத்துல கமல் கொடுத்த மூன்று ஹிட் படங்கள்.. காலை வாரிவிட்ட தக் லைஃப் – Cinemapettai

Tamil Cinema News

Kamal : கமலின் திரைப்பயணம் என்பது மிகப் பெரியது. ஏனென்றால் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டார். ஆகையால் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சினிமாவில் தான். அதுவும் பல தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் 200க்கும் மேற்பட்ட படங்களில் கமல் நடித்திருந்தாலும் அவரது ஹிட் படங்கள் என்றால் மிகக்குறைவு தான். இதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதை தான்.

ஏனென்றால் பல வருடங்களுக்குப் பிறகுதான் அந்தக் கதையின் கருத்து ரசிகர்களுக்கு புரியும்.இவ்வாறு ஹேராம், அன்பே சிவம் போன்ற படங்கள் வெளியாகி பல வருடங்களுக்குப் பின் ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.

இதனால் அந்த காலகட்டத்தில் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த 15 வருடங்களாக கமல் மூன்று ஹிட் படங்கள் மட்டும் தான் கொடுத்திருக்கிறார்.

15 வருடங்களில் மூன்று ஹிட் மட்டும் கொடுத்த கமல்

அதாவது கமல் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம், ஜீத்து ஜோசப்பின் பாபநாசம் மற்றும் லோகேஷின் விக்ரம் ஆகிய படங்கள் தான் வெற்றி பெற்றது. மற்ற படங்கள் எல்லாமே தோல்வி லிஸ்டில் தான் உள்ளது. ஷங்கர், கமல் கூட்டணியில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது இந்தியன் 2 படம்.

ஆனால் இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேபோல் மணிரத்னம், கமல் காம்போ பெரிதும் எதிர்பார்த்த நிலையில் தக் லைஃப் படமும் ட்ரோல் கன்டென்ட் ஆக மாறிவிட்டது. இவ்வாறு கமல் அடுத்தடுத்து ஆட்டம் கண்டு வருகிறார்.

மேலும் கமல் வில்லனாக நடித்த கல்கி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்த கமல் முயற்சிக்கலாம் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.