Dhanush : ஒல்லியாக இருந்தாலும் நடிப்பு கில்லி மாதிரி என்பதைப் போல தனுஷ் சினிமாவில் பயங்கரமான நடிப்பை வெளிப்படுத்தபவர்.
போன மாதம் ஜூன் 20ஆம் தேதி குபேரா படம் பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகி பயங்கர வரவேற்பை கொடுத்தது. தனுஷின் தேவா என்ற பிச்சைக்காரன் கதாபாத்திரம் மக்களிடையே மேலும் ஒரு வரவேற்பை பெற்றது.
படம் ரிலீஸ் ஆகி ஒரு நாளிலேயே 13 கோடி வசூல் செய்தது. இந்தத் திரைப்படம் ஜூலை 20க்கும் மேற்பட்ட அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இட்லி கடை : இயக்குமும், தயாரிப்பும், நடிப்பும் தனுஷ் செய்துள்ள படம். மீண்டும் நடிகை நித்யா மேனன் உடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. முக்கிய பிரபலங்களான பார்த்திபன், சத்யராஜ், அருண் விஜய் இவர்களும் இத்திரைப்படத்தில் இணைகிறார்கள். தனுஷின் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து தனுஷ் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். பிரபல மலையாள நடிகை மமீதா பைஜு இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
விஜயுடன் ஜோடிபோட்ட நடிகை மீண்டும் தனுஷுடன் ஜோடி போட்டு நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது