Cinema : அந்த காலத்தில் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்றால் மிகப் பெரிய இயக்குனர்களால் மட்டும்தான் ஒரு நல்ல திரைப்படத்தை இயக்க முடியும் என்ற நம்பிக்கை சினிமா வட்டாரத்தில் இருந்து வந்தது. ஆனால் இப்போது காலமே மாறிவிட்டது.
தற்போது பெரிய இயக்குனர் சின்ன இயக்குனரா அல்லது ஹீரோ பெரியவரா என்றெல்லாம் பார்த்து ஒரு திரைப்படம் தியேட்டரில் ஓடுவதில்லை. இந்த காலகட்ட சினிமாவில் சின்ன பட்ஜெட் திரைப்படம் என்றாலும் கருத்து நல்லா இருக்கிறதா என்று தான் மக்கள் பார்க்கின்றனர். அப்படி பார்த்தால் இந்த வருடம் சின்ன பட்ஜெட்டில் உருவான இரண்டு படங்கள் ஹிட் அடித்துள்ளது.
டிராகன் :
கல்லூரியில் இருந்து ஆரம்பித்த கதை, வேலைக்கு போகாமல் இருக்கும் ஹீரோ, போலி மார்க் ஷீட்டால் வந்த பிரச்சனை, திருமணத்தில் ஏற்படும் மனக்குழப்பங்கள் இப்படி ஒரு திரைப்படத்தில் இளைய சமுதாயத்துக்கு கருத்தை சொல்லும் நல்ல படமாக இயக்கினார் அஸ்வத் மாரிமுத்து.
இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் பயங்கரமான வரவேற்பு கொடுத்தது. படம் வெளியானதில் இருந்தே பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரே பாராட்டு மலையும் குவிந்தது. வெறும் 37 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் எதிர்பாராதளவு 153 கோடி வசூல் செய்து அபார வெற்றி கொடுத்தது.
டூரிஸ்ட் ஃபேமிலி :
சசிகுமார், சிம்ரன் போன்ற பிரபலமானவர்கள் நடித்து ஒரு குடும்ப பாங்கான திரைப்படமாக வெளிவந்தது. என்னது படத்தின் பெயரை வித்தியாசமா இருக்கு என்று மக்கள் திரைக்கு சென்று அப்படி என்னதான் கதையா இருக்கும் என்று பார்த்துள்ளனர்.
கடைசியில் எமோஷனல் டச்சுடன் படத்தை முடித்து பயங்கரமான படைப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். ஏழு கோடி பட்ஜெட்டில் உருவாகி 90 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தது.