Memes: என்ன எல்லாரும் இப்படி கிளம்பிட்டாங்க அப்படின்னு சோசியல் மீடியாவில் ஒரே புலம்பல் தான். இதற்கு காரணம் தனுஷ் கேட்ட 20 கோடி ராயல்டி தான்.

இது என்ன இப்ப டிரெண்டா என யோசிக்கும் அளவுக்கு திரை உலகில் பல சம்பவங்கள் நடக்கிறது. இதில் இளையராஜா பாடல் காப்பி ரைட் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதை அடுத்து நயன்தாரா விவகாரத்தில் தனுஷ் 10 கோடி கேட்டு கேஸ் போட்டார். இப்போது பார்த்தால் வடசென்னை பட விவகாரத்தில் 20 கோடி கேட்டு இருக்கிறார்.

வெற்றிமாறன் சிம்பு இணையும் படத்தில் தான் இந்த பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. வடசென்னை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதுதான் இந்த அக்கப்போருக்கு காரணம்.

நீங்க தாராளமா ராஜன் கேரக்டர் வச்சு படம் எடுக்கலாம். ஆனா 20 கோடி குடுத்துடுங்க என அரசால்ட்டாக சொல்லிவிட்டாராம் தனுஷ். உடனே சிம்பு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் சண்டைக்கு தயாராகி விட்டனர்.

மைக்க புடிச்சு மேடையில பேசும்போது நல்ல ஒரு மாதிரி பேசுறாரு. ஆனா இப்ப வேற மாதிரி பேசுறாரு என ஒரு தரப்பினர் தனுஷை ரோஸ்ட் செய்து வருகின்றனர். அதே சமயம் சிம்பு ரசிகர்கள் இதுவே எங்க அண்ணனா இருந்திருந்தா படம் எடுத்துக்கோங்கனு பெருந்தன்மையா சொல்லி இருப்பாரு.

தனுஷை நயன்தாரா திட்டுனதுல தப்பே கிடையாது என ட்ரோல் செய்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனுஷ் ரசிகர்கள் நீங்க மட்டும் படத்தை எடுத்து இலவசமா ரிலீஸ் பண்ண போறீங்களா.
ரிலீசுக்கு முன்னாடியே எல்லா ரைட்சும் வித்து காசு பார்க்க தான போறீங்க. அப்ப நாங்க மட்டும் இலவசமாக கொடுக்கணுமா ராயல்டி கேக்குறதுல தப்பு இல்ல என இரு தரப்பு ரசிகர்களும் மோதிக் கொள்கின்றனர்.
இப்படியாக தற்போது இணையத்தில் பரவி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.