Vijay Tv: நெடுந்தொடராக விஜய் டிவியில் தற்போது வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஆரம்பித்து கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகியும் முடிக்காமல் கதையை கொண்டு வந்தார்கள். ஆனால் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்பார்த்த புள்ளிகளை பெற முடியாததால் இந்த சீரியலை முடிப்பதற்கு சேனல் தரப்பில் இருந்து தயாராகி விட்டார்கள்.
அந்த வகையில் இனியா நித்திஷிடமிருந்து ஒரேடியாக விடுதலை பெற்று கோபி பாக்யாவின் மகளாகவே சந்தோஷமாக வாழ்வதற்கு தயாராக போகிறார். இதற்கு இடையில் ஏற்பட்ட சிக்கல்களை கோபி தனியாலாக நின்னு சமாளித்து ஒரு சிறந்த அப்பா என்ற அந்தஸ்தை பெரும் அளவிற்கு எல்லா பிரச்சினைகளையும் அவர் மீது போட்டுக்கொண்டு இனியாவை காப்பாற்றுகிறார்.
ஒரு கணவராக கோபி தோற்று போயிருந்தாலும் சிறந்த அப்பாவாக ஜெயித்து கட்டி விட்டார். இந்த சீரியல் இன்னும் இரண்டு வாரங்களில் முடியப்போகிறது. இதே நாளில் இன்னொரு சீரியலும் முடிவுக்கு கொண்டு வருகிறார்கள். அந்த சீரியல் ஆரம்பித்து கிட்டத்தட்ட 200 எபிசோடு மட்டுமே தாண்டி இருக்கிறது. ஆனாலும் திடீரென்று கதைகளை ஒன்றாக கூடி முடிப்பதற்கு தயாராகி விட்டார்கள்.
ஆனால் இந்த சீரியல் மோசம் என்று சொல்லும் அளவிற்கு கதை இல்லை. இருந்தாலும் சரியான நேரமும், அடுத்த கதை எதுவும் இல்லாததாலும் உடனே முடிப்பதற்கு முடிவெடுத்து விட்டார்கள். ஜனவரி மாதத்தில் ஆரம்பித்த தங்கமகள் என்ற சீரியல் முடிவுக்கு வரப் போகிறது. ரங்கநாயகி தான் ராமசாமியை கொலை செய்திருக்கிறார் என்ற விஷயம் அனைவருக்கும் தெரியவரும் பொழுது அதற்கான தண்டனை ரங்கநாயகி பெறுகிறார்.
அதனால் ஹாசினி மீது எந்த தவறும் இல்லை என்று ராமசாமியின் பிள்ளைகள் உணர்ந்ததால் ஹாசினியை ஏற்றுக்கொண்டு ஒன்று சேர போகிறார்கள். இந்த சீரியலும் இன்னும் இரண்டு வாரங்களில் முடியப்போகிறது. அந்த வகையில் ஒரே நாளில் பாக்யா மற்றும் தங்கமகள் சீரியல்களும் முடிவுக்கு வருவதால் மகளே என் மருமகளே மற்றும் தனம் பாக்கியம் என்ற இரண்டு சீரியல்கள் வரப்போகிறது.