விஜய் தற்போது அரசியல் உலகில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார். கட்சி தொடங்கும் முன்பே பின்னணியில் அமைதியாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் அரசியல் சூழ்நிலை கலகலக்க ஆரம்பித்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் மற்றும் விஜயின் அப்பா S.A. சந்திரசேகர் திரைப்பட உலகத்தில் மட்டும் அல்லாமல், சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளிலும் தன்னுடைய நேர்மையான கருத்துகளை வெளிப்படுத்துவதில் அக்கறை காட்டி வருகிறார். சமீபத்தில் 2011-ல் நடந்த ஒரு அரசியல் நிகழ்வை அவர் பகிர்ந்துள்ளார்.
2011-ல் SAC அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது மிரட்டலா, வாலண்டியரா அல்லது ஏதாவது ஆதாயமா என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு SAC நேரடியாகவும் தெளிவாகவும் பதிலளித்துள்ளார். நிருபரின் கேள்விக்கு பதில் கூறும்போது அவர் உண்மையை அப்படியே பகிர்ந்தார்.
அவர் கூறுகையில் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், OPS மற்றும் டிஜிபி ராஜேந்திரன் வந்து அழைத்த பிறகு, தான் ஜெயலலிதா அவர்களை சந்திக்கச் சென்றதாக தெரிவித்தார். அவர்களது அழைப்பின் அடிப்படையில்தான் இந்த சந்திப்பு நடைபெற்றது எனக் கூறினார்.
அது மட்டுமல்ல, SAC தனது இயக்கத்தில் 15 தகுதியுள்ளவர்கள் இருப்பதாகவும் கூறினார். அந்த நபர்களுக்காக ஏதாவது உதவி கிடைத்தால், அவர் ஆதரவு தருவதாக கூறியதையும் தெரிவித்தார்.
“மிரட்டல் எல்லாம் என்கிட்ட வேலைக்கு ஆகாது,” என்று SAC உறுதியாக கூறினார். “எதுக்குமே பயப்படுற ஆள் இல்ல நான். என் சரித்திரத்தில் பயம் என்ற ஒன்று கிடையாது,” என்று அவர் துணிச்சலாக பதில் கூறினார்.