2025 Best Movies: அதுக்குள்ள 6 மாசம் போயிடுச்சா என ஆச்சரியமாக தான் இருக்கிறது. 2025 வருடம் தொடங்கி தற்போது 7வது மாதத்தில் இருக்கிறோம். இந்த முதல் பாதியில் ஆடியன்ஸை கவர்ந்த ஐந்து படங்கள் பற்றி காண்போம்.
தமிழ் தெலுங்கு மலையாளம் ஹாலிவுட் ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அவற்றில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படங்களை மொழிவாரியாக பார்ப்போம்.
தமிழைப் பொறுத்தவரையில் பல வெற்றி படங்கள் பற்றி சொல்லலாம். ஆனால் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என படகுழுவினரே எதிர்பார்க்காத படம்தான் டூரிஸ்ட் ஃபேமிலி.
கொண்டாட வைத்த டூரிஸ்ட் ஃபேமிலி
புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் ஜோடி நடித்த இப்படம் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு போட்டியாக வந்தது. முதல் காட்சியில் பெரிய பரபரப்பு இல்லை என்றாலும் அடுத்தடுத்த விமர்சனங்கள் படத்தை கொண்டாட வைத்தது.
அதனாலயே 8 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் 83 கோடி வரை வசூலித்து கெத்தாக நிற்கிறது. அடுத்ததாக தெலுங்கில் வந்து வரவேற்பு பெற்ற court state Vs a nobody சிறந்த படமாக இருக்கிறது.
கோர்ட் ரூம் திரில்லர் வகையறாவை சேர்ந்த இப்படம் வசூலிலும் மாஸ் காட்டி இருக்கிறது. அடுத்ததாக மலையாளத்தில் ஆபிஸர்ஸ் ஆன் டூட்டி படம் வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது.
கிரைம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் வெளிவந்த இப்படம் 12 கோடியில் எடுக்கப்பட்டு 54 கோடி வரை வசூலித்துள்ளது. இதற்கு அடுத்து ஹிந்தியில் வெளியான கேசரி சாப்டர் 2 ஹிஸ்டாரிக்கல் கோர்ட் ரூம் டிராமா வகையைச் சேர்ந்தது.
அக்ஷய் குமார், மாதவன் நடித்துள்ள இப்படம் வசூலை பொருத்தவரையில் முதலுக்கு மோசம் இல்லை. ஆனாலும் பார்ப்பதற்கு சிறந்த படம் தான். அடுத்து ஆங்கிலத்தில் வெளியான F1 the movie ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படமாகும்.
விறுவிறுப்பாக நகரும் இந்த கதை நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆக மொத்தம் 2025 முதல் பாதியில் மேற்கண்ட இந்த படங்கள் ஒவ்வொரு மொழியில் சிறந்த படமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.