Direction : இந்த வருடம் 2025 தமிழ் சினிமாவில் தனது திரைப்படத்தை தானே இயக்கி ஹீரோவாகவும் கலக்கி படத்தை டாப் லிஸ்ட்க்கு கொண்டு வந்த ஐந்து நடிகர்களை பற்றி இப்பகுதியில் பார்ப்போம். இன்னும் வெளிவராத தனுஷின் திரைப்படமும் இதில் ஒன்று.
பயோஸ்கோப்..
சங்ககிரி ராஜ்குமார் இத்திரைப்படத்தை இயக்கினார். இவரே ஹீரோவாக நடித்திருந்தார். படம் சின்ன பட்ஜெட் என்றாலும் பெரிய வசூலை கொடுத்தது. இப்படத்தில் சேரன் முக்கியமான கதாபாத்திரத்தில் இடம் பெற்றுக்கிறார்.
கேங்கர்ஸ்..
இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை சுந்தர்சியே இயக்கி நடித்திருக்கிறார் என்பது வரவேற்கக் கூடிய விஷயம் என்றாலும் 16 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம், 12 கோடி மட்டுமே வசூல் செய்தது.
மார்கன்..
இந்த வருடம் ஜூன் 27ஆம் தேதி மார்கன் திரைப்படம் வெளியானது. இதில் ஒரு குற்றத் திரில்லர் கதையாகும். விஜய் ஆண்டனிக்கு அவரே நடித்திருப்பது மிகவும் வரவேற்க கூடிய விஷயமாக இருந்தது. 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 16 கோடி வசூல் செய்து வெற்றியை தொட்டது.
அக்கெனம்..
இந்தத் திரைப்படத்தில் உதய் k இவரே கதை எழுதி நடித்திருக்கிறார் என்பது வரவேற்கக் கூடியதாக இருந்தது. இப்படத்தில் அப்பா மகளும் அருண் பாண்டி மற்றும் கீர்த்தி பாண்டி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றனர்.
இட்லி கடை..
தனுஷ் எழுத்து இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் களம் இறங்கி இருக்கிறார். திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் தனுஷின் இட்லி கடையும் ஒன்று.