Top 10 Kollywood Movies Worldwide Gross : 2025 ஆம் ஆண்டு தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைய போகிறது. இதில் கிட்டத்தட்ட 150 க்கு மேற்பட்ட படங்கள் வெளியான நிலையில் பத்து படங்கள் தான் வெற்றி படங்களாக இருக்கிறது. இந்த சூழலில் அதிக வசூல் செய்த படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அஜித்தின் குட் பேட் அக்லி படம் 245.10 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் 151.85 கோடி வசூலை ஈட்டியது. மூன்றாவது இடத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம் தான் இருக்கிறது. இந்த படம் லைக்காவுக்கு தோல்வியை கொடுத்தாலும் 138.10 கோடி வசூல் பெற்றிருக்கிறது.
நான்காவது இடத்தில் தனுஷின் குபேரா படம் உள்ளது. இந்த படம் வெளியாகி எட்டு நாட்களான நிலையில் 118 கோடி வசூலை பெற்றுள்ளது. மேலும் இப்போதும் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை அடுத்து ஐந்தாவது இடத்தை கமலின் தக் லைஃப் படம் தான் கைப்பற்றி இருக்கிறது.
2025 இல் அதிக வசூல் செய்த முதல் பத்து படங்கள்
வசூல் ரீதியாக இந்த படம் தோல்வியை தழுவினாலும் இதுவரை 98.55 கோடி வசூலை அடைந்துள்ளது. சூர்யாவின் ரெட்ரோ படம் 97.55 கோடி வசூல் பெற்றது. மேலும் ஏழாவது இடத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளது.
இந்த படம் 85 கோடி வசூலை பெற்றது. விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படம் 68 கோடி வசூலை அள்ளியது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட விஷாலின் மதகஜ ராஜா படம் இந்த ஆண்டு வெளியாகி கிட்டத்தட்ட 62.95 கோடி வசூல் செய்து ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.
பத்தாவது இடத்தில் சூரியின் மாமன் படம் 55 கோடி மற்றும் 11 வது இடத்தில் குடும்பஸ்தன் படம் 30 கோடி வசூலை பெற்றிருக்கிறது. முதல் பாதியில் பல படங்கள் தோல்வியுற்ற நிலையில் இரண்டாம் பாதி பெரிய படங்கள் வெளியாக இருக்கிறது. அது வசூல் வேட்டை ஆடுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.