karthi : நடிகர் கார்த்தி அவர்கள் எத்ரதமான கதாபாத்திரத்தில் நடிக்க கூடிய ஒரு நடிகர். இவரது பேச்சுக்கள், நடிப்பு என அனைத்துமே அனைவரையும் ஈறும் விதத்தில் இருக்கும். இவரும் தனி பெண் ரசிகர் கூட்டத்தையே வைத்திருக்க கூடிய ஒரு நடிகர்.
இவர் தற்போது மெய்யழகன் படத்திற்கு பிறகு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. மெய்யழகன் படம் இவரை மேலும் ரசிக்க வாய்த்த ஒரு படம். அத்தான், அத்தான் என்று சொல்லியே நம் அனைவரையும் அவர் பக்கம் இழுத்திருப்பார்.
சினிமாவை ஆட்டிப்படைக்க கைவசம் 4 படங்களை வைத்துள்ள கார்த்தி..
இவர் தற்போது 2025-ல் எந்த படமும் ரிலீஸ் செய்யவில்லையாம். ஆனால் அடுத்த ஆண்டிலிருந்து ரிலீஸ் செய்ய நல்ல நல்ல படங்களை கைவசம் வைத்துள்ளாராம். தற்போது “மார்ஷல்” என்ற படத்தில் நடித்துக்கொண்டுள்ளாராம்.
இந்த படம் ஒருபக்கம் தயாராகி கொண்டிருக்க. 2026இல் நடிப்பதற்க்காக “வா வாத்தியாரே” படத்தில் கால்ஷீட் கிடைத்துள்ளதாம். அதுமட்டுமல்லாமல் இவர் “கைதி -2” படப்பிடிப்பும் இந்த வருடத்தில் முடிந்து விடுமாம்.
இதற்கு அடுத்ததாக “சர்தார் 2 ” படம் 2026 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறார்களாம். கார்த்தி படம் ரிலீஸ் ஆகவில்லையே என்று ஏங்கிய இவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கார்த்தி அடுத்தடுத்த படைகளை தயார் செய்துள்ளாராம்.
சரவெடியாக அடுத்தடுத்து படங்களை கொடுத்து ரசிகரகாளி திருப்திப்படுத்த தயாரக இருக்கிறாராம் கார்த்தி. இந்த அணைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.