Vijay : தமிழக அரசியலில் தற்போது மிகுந்த கவனத்தை ஈர்த்து வரும் புதிய முகம் விஜய். சமீபத்தில் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால், தனிப்பட்ட அரசியல் வளர்ச்சியை விட, கூட்டணி அரசியலே வெற்றிக்கு வழி என்ற புரிதலோடு, விஜய் அரசியல் களத்தில் வித்தியாசமான முடிவுகளை எடுத்து வருகிறார் என்பது சமீபத்திய தகவல்கள் காட்டுகின்றன.
கூட்டணிக்கு முடிவெடுத்த விஜய்..
அதன்படி, காங்கிரஸுடன் 40 தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், அதன் மூலம் தமிழகத்தில் வலுவான தேசிய கூட்டணியை உருவாக்கலாம் என்ற எண்ணமே விஜயின் முடிவுக்கு பின்னணி என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், தொல் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனும் விஜய் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார். பின்தங்கிய சமூகங்களின் ஆதரவைப் பெறுவதற்கு இந்த கூட்டணி பெரும் பங்களிப்பு அளிக்கும் என நம்பப்படுகிறது.
கண்டிஷன் போட்ட பிரேமலதா..
இதோடு, தேமுதிக (DMDK) கூட்டணிக்கும் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தங்கள் மகன் விஜ் பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என நிபந்தனை வைத்துள்ளார். அதற்கும் விஜய் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்த மூன்று முக்கிய கூட்டணிகளுடன் விஜய் களம் இறங்குவது, அவரை தனிமைப்படுத்தாமல், வலுவான கூட்டணி அரசியல் வீரராக உருவாக்கும். தமிழக அரசியலில் புதிய சக்தியாக அவர் தோன்றுகிறார் என்ற கருத்து வலுப்பெறுகிறது.
வெற்றி பெறுவது உறுதி..
சமீபத்திய கருத்துக் கணிப்புகள் படி, விஜயின் கட்சிக்கு இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. ஆனால் தனியாக நிற்கும் போது அரசியல்பலம் குறையலாம் என்பதால், தன்னுடைய அரசியல் கனவுகளை நிறைவேற்றுவதற்கான கூட்டணி உத்தியை விஜய் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது வெளிப்படையாகிறது.
அடுத்த தேர்தலில் விஜய் தலைமையிலான TVK கட்சியின் கூட்டணி தமிழக அரசியல் சமச்சீரை மாற்றும் சக்தியாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.இதனால் கூட்டணி போட்டால் கண்டிப்பாக ஆட்சியை பிடித்து விடலாம் என்று கூட்டணியில் களமிறங்கிவிட்டார் விஜய் என அரசியல் வட்டாரங்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. அவர் கூட்டணி போட்டாலும் வெற்றி உறுதி என பேசிக்கொள்கிறர்கள்.