Mysskin : வித்தியாசமான படங்களை கொடுக்கக்கூடியவர் தான் இயக்குனர் மிஷ்கின். இயக்குனராக மட்டுமல்லாமல் இப்போது நடிகராகவும் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்திய நேர்காணலில் பேசிய மிஷ்கின் இரண்டு படங்கள் குறித்து மெய்சிலிர்த்து பேசி உள்ளார்.
மிஷ்கின் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் என்ற படத்தை எடுத்திருக்கிறார். இதில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடைபெறுவதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்த சூழலில் பேட்டியில் பேசிய மிஷ்கின் தான் எடுத்த படங்கள் கூட சிறந்ததாக இல்லை.
கடந்த 30 வருடங்களில் நான் பார்த்த சிறந்த படம் கொட்டுகாளி மற்றும் கடைசி விவசாயி படங்கள் தான். ஆனால் இந்த இரண்டு படங்கள் சரியாக ஓடவில்லை. இந்த படம் தன்னை பிரமிக்க வைத்ததாக சொன்னால் பலரும் என்னை திட்டுகிறார்கள் தான்.
மிஷ்கின் பாராட்டிய இரண்டு படங்கள்
ஆனால் இப்போது இப்படி பேசுபவர்களின் அடுத்த தலைமுறை, இந்த படங்களை கண்டிப்பாக கொண்டாடுவார்கள். பல வருடங்கள் கழித்து தான் இந்த படங்களின் மதிப்பு அவர்களுக்கு தெரியும் என்று மிஷ்கின் பேசியிருக்கிறார். குறிப்பாக சூரியின் கொட்டுகாளி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தன்னை கவர்ந்ததாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் கொட்டுகாளி படத்தின் இயக்குனர் வினோத் ராஜ் மற்றும் கடைசி விவசாயி படத்தில் இயக்குனர் மணிகண்டன் ஆகியோர் சிறந்த படைப்பாளி என்றும் பெருமையாக பேசுகிறார். இருவருமே ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
பல வருடங்கள் கழித்து கண்டிப்பாக இந்த படங்கள் நின்று பேசும் என்று கூறியிருக்கிறார். கமலின் படங்கள் எவ்வாறு காலம் தாழ்த்தப்பட்டு கொண்டாடப்படும் அந்த வகையில் மிஷ்கின் சொன்னது போல் இந்த படங்களும் காலம் கடந்து பேச வாய்ப்பு இருக்கிறது.