ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல்முறையாக விளையாட உள்ளது. இதுவரை 41 ஆண்டுகளில் 17 முறை ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்பட்டுள்ள நிலையில், இரு அணிகளும் ஒரே நேரத்தில் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன.
இதனால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற பின்னர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் இஷ்டத்துக்கு பேசி வருகிறார்கள் குறிப்பாக ஷாகித் அப்ரிடி, இன்சமாம் மற்றும் சோயப் ஆதடர் போன்ற முன்னாள் வீரர்கள் இந்தியாவை வம்பிழுக்கும் விதமாகவும், தரக்குறைவாகவும் பேசி சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார்கள்
- இந்தியா அம்பையர் மற்றும் ஐசிசி கிரிக்கெட் கவுன்சிலை விலைக்கு வாங்கி விட்டது
- போட்டி நடைபெறும் இடங்களை இந்தியாவே தீர்மானிக்கிறது
- பாகிஸ்தான் அணிக்கு எதிராக அம்பையர்கள் செயல்படுகிறார்கள்
- இந்தியா ஒழுக்கமின்றி விளையாடுகிறது. ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் விளையாட்டை அரசியல் ரீதியாக பார்க்கிறது.
இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஓவரில் இருந்தே பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் அழுத்தத்தை கொடுத்தனர். இதனால் பதற்றம் அடைந்த வங்கதேச அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதனால் வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, ஆசியக் கோப்பை இறுதிக்குள் கால் பதித்துள்ளது.

வெற்றிபெறும் என்று நினைத்த வங்கதேச வீரர்கள் தோல்வியடைந்தது அண்ணா ரசிகர்களை சோகம் அடையசெய்துள்ளது. இதன் மூலமாக ஞாயிற்றுக் கிழமை நடக்கும் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன.
இதுவரை நடைபெற்ற போட்டிகள்
கடந்த 41 ஆண்டுகளில் ஆசியக் கோப்பை தொடர் 17 முறை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருமுறை கூட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடியதே இல்லை.
தற்போது முதல் முறையாக இந்தியா – பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோத உள்ளது. இந்த ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை ஏற்கனவே இந்திய அணி 2 முறை வீழ்த்தி இருக்கிறது.
அந்த 2 முறையும் பாகிஸ்தான் அணியை இந்திய அணி விளாசியது என்றே சொல்லலாம். ஆனாலும் பாகிஸ்தான் அணி நாக் அவுட் போட்டிகளில் மிகச்சிறப்பாக செயல்படக் கூடிய அணி என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.இன்று இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பு
இதன்பின் ஒருநாள் இடைவேளைக்கு பின், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதே மைதானத்தில் போட்டி நடக்கும் என்பதால், பிட்சில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று நம்பப்படுகிறது. இந்தப் போட்டியிலும் மீண்டும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆசியக் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளில் பலமான அணியாக இந்தியாவே உள்ளதால் இந்தியா வெற்றி பெறும் என்று இந்திய நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.