Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் தனது திரைபயணத்தை மாநகரம் படத்தின் மூலம் தொடங்கினார். அதை அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது.
அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை லோகேஷ் எடுத்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும் லோகேஷின் லைன் அப்பில் இன்றைய படங்கள் இருக்கிறது.
கைதி, விக்ரம் 2, ரோலக்ஸ் போன்ற படங்களை அடுத்தடுத்து எடுக்க இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலமும் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்தை லோகேஷ் தயாரிக்கிறார்.
லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு
தற்போது 39 வயதாகும் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. லியோ படத்திற்கு 20 கோடி சம்பளம் வாங்கிய லோகேஷ் தற்போது ரஜினியின் கூலி படத்திற்கு 50 கோடி வரை சம்பளம் பெறுகிறார். இந்த சூழலில் லோகேஷின் சொத்த மதிப்பு 100 கோடியில் இருந்து 130 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
கோயமுத்தூரில் லோகேஷுக்கு சொந்தமாக இரண்டு கோடி மதிப்பில் ஒரு பிரம்மாண்ட வீடு இருக்கிறது. மேலும் 70 லட்சம் மதிப்புள்ள லெக்ஸஸ் ES 300h காரை விக்ரம் பட வெற்றிக்காக கமல் லோகேஷுக்கு பரிசாக வழங்கி இருந்தார்.
இது தவிர லோகேஷ் இடம் 1.7 கோடி மதிப்பிலான BMW 7 சீரிஸ் இருக்கிறது. மேலும் இயக்குனர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த லோகேஷ் விரைவில் நடிகராகவும் மாற இருக்கிறார். இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.