4வது முறையாக போலீஸ் வேடத்தில் விஜய்.. அதே டெக்னிக் ஜனநாயகனுக்கு ஹிட் கொடுக்குமா? – Cinemapettai

Tamil Cinema News

Jananayagan : நடிகர் விஜய் அவர்கள் படம் கதை எதுவாக இருந்தாலும் பெரும்பாலும் ஹிட்டாகி கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் போலீஸ் வேடம் அவருக்கு நன்றாகவே வசூலை பெற்று தந்திருக்கிறது. அதனால் ஜனநாயகன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மக்கள் மத்தியில்.

பொதுவாக ஜனநாயகன் படத்தில் அரசியல்வாதியாக விஜய் அவர்கள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது போலீசாக வருவது மிகப்பெரிய ட்விஸ்ட் ஆக உள்ளது.அந்த வரிசையில் போலீஸ் வேடமணிந்து விஜய் அவர்கள் ஹிட் அடித்த படத்தை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

போக்கிரி : போக்கிரி படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் முதலில் நடிகர் விஜய் அவர்கள் ரவுடியாக வந்து பிறகு , பிளாஷ்பாக்கில் போலீஸ் ஆக வந்திருப்பார்.

ரவுடியாக இருந்து முதலில் இவர் செய்த சின்ன சின்ன அட்டகாசங்கள் அவ்வளவு அழகாக இருக்கும். ரவுடிகளை வேவு பார்க்க வந்த போலீஸ் என்பது பிறகு தெரியவரும். 2007 ஆம் ஆண்டு இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

ஜில்லா : ஜில்லா திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி இதுவும் மிகப்பெரிய வசூலை பெற்று தந்தது. இதில் மோகன்லால் அவர்களின் வளர்ப்பு பிள்ளையாக இருப்பார் விஜய். பாசத்திலும் விசுவாசத்திலும் நம் மனதை நொறுங்க வைத்திருப்பார்.

முதலில் பிடிக்காமல் அப்பாவிற்காக போலீஸ் வேலைக்கு சென்றாலும், பிறகு ரவுடியாக இருக்கும் நம் அப்பாவை திருத்த வேண்டும் என்பதற்காக விருப்பப்பட்டு போலீஸ் வேலையை ஏற்றுக் கொள்வார். திரைப்படத்திலும் விஜய் அவர்களுக்கு போலீஸ் வேடம் நன்றாகவே கைக்கொடுத்திருந்தது.

தெறி : தெறி திரைப்படம் 2016 ஆம் ஆண்டு மிகப்பெரிய வசூல் மற்றும் நல்ல கதைகளத்துடன் நல்ல வரவேற்பையும் பெற்றது. இத்திரைப்படத்தில் முதலில் சாதாரண பேக்கரி நடத்திக் கொண்டிருக்கும் சராசரி மனிதனாக எல்லோருக்கும் பயந்து பணிந்து போவது போல் விஜய் அவர்களை காட்டி இருந்தாலும்.

இரண்டாம் பாகத்தில் போலீஸ் வேடத்தில் தெறிக்க விட்டிருப்பார் அட்லீ. இந்த திரைப்படத்திலும் போலீஸ் வேடம் மிகவும் கச்சிதமாக நடிகர் விஜய் அவர்களுக்கு பொருந்தி இருக்கும்.

அதே டெக்னிக் ஜனநாயகத்திலும் ஹிட் கொடுக்குமா?

ஜனநாயகன் : தற்போது வெளிவந்திருக்கும் நடிகர் விஜய் அவர்களின் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் விஜய் அவர்கள் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இது விஜய் அவர்களுக்கு பழகிப்போன வேடம் என்பதால் இந்த படம் மாபெரும் வெற்றியை ஈட்டி தரப்போகிறது என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை.

இத் திரைப்படத்தின் டிரைலர் நடிகர் விஜய் அவர்களின் பிறந்த நாளான இன்று வெளியாகி அனைவரையும் மிரள வைத்திருக்கிறது. ட்ரெய்லர் ஆரம்பித்தவுடன் முதலில் “என் நெஞ்சில் குடியிருக்கும்” என கேட்கும் நடிகர் விஜய் அவர்களின் குரல் நம்மை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகிறது.

கண்டிப்பாக அரசியல் களத்தை மையமாகக் கொண்டு இந்த கதை இருக்கும் என மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் அவர்களின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துகொண்டிருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.