விஜய், அஜித்திற்கு பின்பு அதிக ரசிகர் பட்டாளம் இருப்பது சூர்யாவிற்கு தான். அதற்கு காரணம் சினிமாவையும் தாண்டி இவர் செய்யும் பல நல்ல விஷயங்கள்தான். இவர் சினிமாவிற்கு வந்து 25 வருடங்களுக்கு மேலாகி விட்டது.1997இல் நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் இன்று ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார்,
பூவெல்லாம் கேட்டுப்பார் படம் இவருக்கு திருப்புவனையாக அமைந்தது. அதன் பிறகு பிரெண்ட்ஸ், நந்தா, மௌனம் பேசியதே, காக்க காக்க என சினிமாவின் தன்னுடைய கேரியரை உயரப் பரக்கச் செய்தார். ஆனால் இப்பொழுது சினிமாவில் சூர்யாவிற்கு சரியான கட்டம் அமையாதது அவரது ரசிகர்களுக்கு வருத்தமாக தான் இருக்கிறது
ஜெய் பீம், சூரரைப் போன்று படங்களுக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் நான்கு வருடங்களாக திணறி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கங்குவா, ரெட்ரோ படங்கள் ப்ளாப்பானது. அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட சூர்யா தற்போது கதை தேர்வு செய்வதற்கு திறமையான ஆட்களை நியமித்துள்ளார்.
இப்படி 4 வருடங்களாக தொடர் தோல்வி முகத்தை பார்த்தவர் இப்பொழுது அந்த பாரத்தைலாம் ஆர் ஜே பாலாஜி மீது இறக்கி வைத்து விட்டார். இப்பொழுது இவர்கள் கூட்டணியில் கருப்பு படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான டீசர் அனைவரையும் கவர்ந்தது.
கருப்பு படம் வருகிறது தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. நீண்ட காலத்துக்கு பிறகு சூர்யாவிற்கு இந்த படம் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்பொழுதுமே ஆர் ஜே பாலாஜி மினிமம் கேரண்டி இயக்குனராக வலம் வருபவர். இவருடன் சூர்யா சேர்ந்து இருப்பதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.