Dhanush : திறமைக்கு அழகு தடை இல்லை என்பதை நிரூபித்து காட்டியவர் தான் தனுஷ். ஆரம்பத்தில் பல கேலி கிண்டல்களை சந்தித்த தனுஷ் இப்போது மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். இந்த அடங்காத அசுரனின் அசுர வளர்ச்சி பலரையும் வியந்து பார்க்க வைக்கிறது. இன்று தனுஷ் தனது 42 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
நடிகராக மட்டுமே சினாமாவில் நுழைந்த தனுஷ் பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல திறமைகளை வளர்த்துக் கொண்டார். அது மட்டுமா தென் இந்திய மொழிகளை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
அவரது நடிப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றில் உருவாகி உள்ள இட்லிகடை படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தனுஷின் பிறந்தநாள் அன்று அவரது சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தி இருக்கிறது.
42 வயதில் தனுஷின் சொத்து மதிப்பு
கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற குபேரா படத்திற்கு அவரது சம்பளம் 30 கோடி என்று கூறப்படுகிறது. ஆகையால் 2025 நிலவரம்படி தனுஷிடம் 230ல் இருந்து 300 கோடி வரை சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக போயஸ் கார்டனில் இருக்கும் பிரம்மாண்ட பங்களா மட்டும் கிட்டத்தட்ட 150 கோடியாம். இதுதவிர ஆழ்வார்பேட்டையில் மற்றொரு வீடு தனுஷ் பெயரில் இருக்கிறது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் HSE, பென்ட்லி கான்டினென்டல் ஃபிளையிங் ஸ்பர், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், ஆடி போன்ற கார்கள் தனுஷ் கைவசம் இருக்கிறது.
குறிப்பாக 7 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கரையும் தனுஷ் வைத்திருக்கிறார். மேலும் வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாகவும் தனுஷ் படங்களை தயாரித்து வருகிறார். இன்னும் தனுஷ் பல வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்று அவரது பிறந்தநாளில் ரசிகர்கள் வாழ்த்து கூறுகின்றனர்.