1991இல் நடிகையாக அறிமுகமான சுகன்யா இன்று வரை தமிழில் 70 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அதில் 40க்கு மேல் சூப்பர் ஹிட். நயன்தாரா கூட இவரை போல் இப்படி அதிகமான வெற்றி சதவீதம் வைத்ததில்லை. 90 கால கட்டங்களில் பெரிய நடிகர்கள் எல்லோரும் சுகன்யாவுடன் நடித்த படம் ஹிட்டாகி விடும் என நம்பினார்கள். அப்படி மரண மாஸ்சான 5 படங்கள்.
வால்டர் வெற்றிவேல்: பி வாசு இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் சத்யராஜுக்கு தனி அந்தஸ்தை கொடுத்தது. “சின்ன ராசாவே சிற்றெறும்பு பாடல்” பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆனது. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வெள்ளி விழா கண்டது
சின்ன கவுண்டர்: விஜயகாந்தை இன்னும் சின்ன கவுண்டர் என அழைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு இந்த படம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இதில் மனோரமா, சுகன்யா என நடிப்பு ராட்சசிகள் போட்டி போட்டு நடித்தனர்
மகாநதி: கமலுக்கு சரிசமமாக இந்த படத்தில் சுகன்யா நடித்திருப்பார். மகாநதி படமும் சூப்பர் ஹிட் வரிசையில் இணைந்தது இப்படி பெரிய ஹீரோக்களுடன் இணைந்து சுகன்யா பல படங்களை வெள்ளி விழா காண செய்துள்ளார்.
சாமுண்டி: சரத்குமார் உடன் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மகா பிரபு, சாமுண்டி, இளவரசன். ஆதித்யன் கேப்டன் என இருவரும் பல படங்களின் ஜோடி போட்டனர் அந்த அளவுக்கு இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டானது
சின்ன ஜமீன்: சுகன்யா நடிகர் கார்த்திக்காகவும் பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆறடி உயரம் இருப்பதால் பல ஹீரோக்களுக்கு இவர் காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகும். அதனாலேயே சரத்குமார், கார்த்திக், போன்றவர்களுடன் நிறைய படங்களில் நடித்தார்.