Vijay Tv Serial: விஜய் டிவியில் பல வருஷமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரே சீரியல் பாக்கியலட்சுமி தான். கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்கு மேல் தாண்டியும் முடிக்க முடியாமல் கதையை இழுத்துக் கொண்டே வருகிறார்கள். பார்ப்பவர்களும் இதற்கெல்லாம் ஒரு எண்டே இல்லையா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அரைத்த மாவை அரைத்து போரடித்து வருகிறார்கள்.
ஆனாலும் கோபி கேரக்டர் அனைவரையும் அதிக அளவில் கவர்ந்ததால் இவருக்காகவே இந்த நாடகத்தை பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போது அதுவும் போரடித்து விட்டது என்பதற்கு ஏற்ப பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவை சந்தித்து விட்டது. இதற்கிடையில் கோபி கதாபாத்திரத்தில் நடிப்பவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஒரு ஹிண்டு மாதிரி கொடுப்பார்.
அதாவது சீக்கிரத்திலேயே இந்த சீரியல் முடிய போகிறது என்று அடிக்கடி சொல்லி வருவார். ஆனால் தற்போது இதில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்பம் மீனா என்பவர் கொடுத்த பேட்டியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு முடிவே இல்லை. இனி அடுத்தடுத்து வரப் போதும் கதையில்தான் எதிர்பார்க்காத டுவிஸ்ட் வரப்போகிறது என்று சொல்லி இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இனியாவின் திருமணம் தவறாக முடிந்து விட்டது, சுதாகர் மற்றும் நித்திஷ் நல்லவர்கள் இல்லை என்ற விஷயமும் பாக்யா மற்றும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்து விட்டது. இதனால் இனிய வாழ்க்கை கேள்விக்குறியாகும் அளவிற்கு பாக்யா வீட்டிற்கு திரும்ப வந்து விடுவார். அதன் பிறகு இனியா படிப்பிலும் வேலையிலும் கவனம் செலுத்தி ஜெயிப்பது போல் இருக்கும்.
அதே மாதிரி செல்வியின் மகன் ஆகாஷ், ஐஏஎஸ் படிப்பை முடித்து ஈஸ்வரி மற்றும் கோபியை தல குனிய வைப்பார். அதோடு மட்டுமில்லாமல் கேள்விக்குறியாக இருக்கும் இனியா வாழ்க்கையை சரி செய்யும் விதமாக ஆகாஷ் இனிய ஒன்று சேருவார்கள். அதுவரை பாக்கியலட்சுமி சீரியல் ஓடிக்கொண்டே தான் இருக்கும்.