Suriya : சூர்யா சிவகுமாரின் வாரிசு என்பதால் சினிமாவில் வேண்டுமானால் எளிதில் நுழைந்து இருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் பல மோசமான விமர்சனங்களை சந்தித்தார். அதன் பின் தனது கடின உழைப்பால் விஜய், அஜித் ஆகிய நடிகர்களின் அடுத்த இடத்தை பிடித்தார்.
இன்று சூர்யா தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு வெளியாகி இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு சூர்யா ஒரு படத்திற்கு 25 கோடி வரை சம்பளம் வாங்கிய நிலையில் அவரது சொத்து மதிப்பு 186 கோடியாக இருந்தது.
அடுத்ததாக 2024ஆம் ஆண்டு ஒரு படத்திற்கு 30 கோடி வரை சம்பளம் வாங்கிய நிலையில் சூர்யாவின் சொத்து மதிப்பு 250 கோடியாக இருந்தது. தற்போது சூர்யாவின் சம்பளம் 40 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது. ஆகையால் 350 கோடிக்கு மேல் தற்போது சூர்யாவின் சொத்து மதிப்பு இருக்கிறது.
சூர்யாவின் சொத்து மதிப்பு
சூர்யா படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் விளம்பரங்கள், தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றின் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார். தனது அகரம் தொண்டு நிறுவனம் மூலமும் பல குழந்தைகளைப் படிக்க வைத்து வருகிறார்.
சென்னையில் சூர்யாவுக்கு சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருக்கிறது. அதோடு சொகுசு கார்களையும் வைத்துள்ளார். இப்போது தனது குடும்பத்துடன் மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதுமட்டுமன்றி ஈசிஆரில் ஒரு பிரம்மாண்ட வீடு கட்டி வருகிறார்.
மேலும் இன்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கருப்பு படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.