salaar : இந்த “salaar” திரைப்படம் ஆனது டிசம்பர் 22 2023 அன்று திரையில் வெளியிடப்பட்டது இத்திரைப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் “கே ஜி எஃப்” படத்தை தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது இந்த படத்தில் நடிகர் பிரபாஸ்,பிரித்விராஜ், சுகுமாரன் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் இரண்டு பாகங்களை கொண்டுள்ளது. இதில் இத்திரைப்படம் முதல் பாகம் ஒரு சாதாரண மனிதன் இருவரின் வாழ்க்கையில் நடக்கும் மோதல்களை கதையாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் இயக்குனர் பிரசாந்த் நீலின் முதல் படமான உக்கிரம் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சி எனவும் தகவல் கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படம் ஆக்சன், திரில்லர், இடை இடையில் காதல் என அனைத்திற்கும் பஞ்சமில்லாமல் கதைக்களம் அமைந்துள்ளது. படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும். இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் அவரகளுக்காவே இந்த ஒப்பிடன் ஓடியது என்றே கூறலாம்.
தேவரதா செய்த சாதனை..
ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல் நம்மளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு படம் 100 நாட்கள் ஓடுவதை பெரிய சாதனை என்ற நிலையில் “Salaar” 500 நாட்களையும் தாண்டி ஹிந்தியில் “jio hotstar “-ல் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.
தொடர்ந்து முதல் 10 இடங்களிலேயே “salaar” படம் அசராமல் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அருகில் கூட நெருங்க முடியாத அளவுக்கு சாதனை செய்து கொண்டிருக்கிறது “salaar”. இது திரையுலகை மேலும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
பொதுவாக பிரபாஸ் அவர்கள் நடித்து பெரும்பாலான படங்கள் வெற்றி படமாக அமைகிறது. அந்த வகையில் பிரபாஸ் அவர்களுக்கு “salaar” படமும் மிகப்பெரிய சாதனை படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் அவர்களின் கூட்டணி நன்றாக இருக்கும். படத்தில் அத்துணை கட்சிகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.