Vijay: நடிகர் விஜய் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று இப்போது ட்விட்டர் பக்கத்தில் பயங்கர வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் ஸ்ரீகாந்த் கைதான போ…தை வழக்கில் விரைவில் விஜய் சிக்குவாரியான யூடியூப் சேனலில் பலரும் ஆதாரமற்ற அறிக்கைகளை கொடுத்து வந்தார்கள்.
இதுகுறித்து இன்று வலைப்பேச்சு சேனல் பிஸ்மி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் விஜய்க்கு அந்த மாதிரி பழக்கம் அறவே கிடையாது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளை சொல்லி இருந்தார். அதில் ஒன்றுதான் விஜயின் உடல்நிலை.
மருத்துவர்களின் கண்காணிப்பில் விஜய்
நடிகர் விஜய்க்கு ஒரு சில வருடங்களுக்கு முன்பே சர்க்கரை நோய் வந்துவிட்டதாக சொல்லி இருக்கிறார். மேலும் உடலில் அதிக அளவு சர்க்கரை ஏறும் அளவுக்கு இது தீவிரமடைந்து இருந்ததாம். இதனால் விஜய் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
தற்போதைய நிலைமை வரை விஜய் முழுக்க முழுக்க மருத்துவ கண்காணிப்பில் தான் இருக்கிறாராம். அவர் ஒரு வேலைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை கூட மருத்துவர்கள் தான் சொல்வார்களாம்.
இரவு இரண்டு இட்லி தான் சாப்பிட வேண்டும் என்று சொன்னால் அதை தாண்டி விஜய் வேறு எதையும் சாப்பிட கூட மாட்டாராம். அப்படி இருக்கும் பட்சத்தில் அவரை போ…தை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்வது தவறான விஷயம் என பிஸ்மி பேசி இருக்கிறார்.
விஜய் முழு மருத்துவ கண்காணிப்பில் இவ்வளவு கண்டிஷன் உடன் உணவுகளை எடுத்துக் கொள்வது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.