சைக்கோ வில்லனாக மிரட்டும் விஜய் ஆண்டனியின் மருமகன்.. மார்கன் ட்ரைலர் எப்படி இருக்கு.? – Cinemapettai

Tamil Cinema News

[

Vijay Antony : ராட்சசன் பட சாயலில் சீரியல் கில்லர் கதைகள் நிறைய வந்திருக்கிறது. ராட்சசன் அளவுக்கு மனதில் நின்ற படங்கள் என்றால் ஒன்று இரண்டு தான். அவ்வாறு அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் ரசிகர்களை கவர்ந்தது.

இப்போது அதே பாணியில் உருவாகி இருக்கிறது விஜய் ஆண்டனியின் மார்கன் படம். லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மார்கன் படத்தில் சமுத்திரகனி, பிரகிடா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் அஜய் தீஷன். விஜய் ஆண்டனியின் அக்கா மகன் தான் இவர். தன்னுடைய மிரட்டலான நடிப்பை மார்கன் படத்தில் கொடுத்திருக்கிறார் என்பது ட்ரெய்லரை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது.

விஜய் ஆண்டனியின் மார்கன் ட்ரெய்லர் விமர்சனம்

அதாவது இளம் பெண்கள் அடுத்தடுத்து கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். இதற்கான விசாரணையில் விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, பிரகிடா ஆகியோர் இறங்கி இருக்கின்றனர். அப்போதுதான் ஒரு வகையான விஷ ஊசியால் இளம்பெண்களை கொடூரமாக கொல்லப்படுவது தெரிய வருகிறது.

விஜய் ஆண்டனிக்கும் அந்த விஷ ஊசி போட்ட நிலையில் உயிர்தப்பித்து விடுகிறார். ஆனால் உடம்பில் ஒரு பாதி மட்டும் கருப்பு நிறமாக மாறிவிடுகிறது. இதை அடுத்து சைக்கோ வில்லனை தேட முயற்சிக்கிறார். அப்போது சைக்கோ கில்லர் அஜய் தீஷன் தான் என்று தெரிகிறது.

அவரை எவ்வாறு விசாரிக்கிறார், கொலைக்கான காரணம் என்ன என்பதுதான் மார்கன் படத்தின் கதை. டிரைலரை மிகவும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் கண்டிப்பாக படம் எதிர்பார்ப்பை மீறிதான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.