50 ஆண்டுகளில் நடிப்பில் முத்திரை பதித்த ராஜேஷ்.. என்றும் நின்று பேசும் 6 பட கேரக்டர்கள்! – Cinemapettai

Tamil Cinema News

[

Actor Rajesh: 1974 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன அவள் ஒரு தொடர்கதை படத்தில் உள்ள தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய நடிகர் ராஜேஷ் 75 ஆவது வயதில் மரணம் அடைந்திருக்கிறார்.

கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என ஜனரஞ்சக கலைஞனாக திகழ்ந்தவர் ராஜேஷ்.

இவர் மறைந்திருந்தாலும் அவருடைய நடிப்பு திறமையை பேசும் அளவிற்கு நிறைய படங்களில் மிரட்டி இருந்தார். அந்த சிறந்த படங்களில் இருந்து முக்கியமான ஆறு கேரக்டர்களை பற்றி பார்க்கலாம்.

நின்று பேசும் 6 பட கேரக்டர்கள்!

கன்னி பருவத்திலே: ராஜேஷ் கதாநாயகனாக நடித்த கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் வடிவுக்கரசி அவருக்கு கதாநாயகி. பாக்யராஜ் வில்லனாக நடித்திருப்பார்.

தன்னுடைய திருமணம் நடந்த நாள் அன்று தான் தனக்கு ஆண்மை குறைவு இருப்பது ராஜேஷுக்கு தெரியவரும்.

தன்னுடைய மனைவியின் வாழ்க்கையை ஒன்றும் இல்லாமல் ஆக்கிய குற்ற உணர்ச்சியில் ராஜேஷ் படம் முழுக்க வருவார்.

அதே நேரத்தில் மனைவி தடம் மாறி விடுவாளோ என்ற பயமும் அவரை வாட்டி வதைக்கும். இந்த படம் பெரிய அளவில் வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.

அந்த ஏழு நாட்கள்: பாக்யராஜ் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த படம் அந்த ஏழு நாட்கள். படத்தின் முதல் காட்சியிலேயே ராஜேஷ் மற்றும் அம்பிகாவுக்கு திருமணம் நடக்கும்.

முதல் இரவு அன்று தான் இன்னொருவரை காதலிப்பதாக அம்பிகா கூறுவார். அந்த காதலனை தேடி கண்டுபிடித்து மனைவியுடன் சேர்த்து வைக்க ஆசைப்படும் டாக்டர் கேரக்டர் ராஜேஷ் ஏற்று நடித்திருப்பார். படத்தின் கிளைமாக்ஸ் மக்களிடையே பெரிய வெற்றியை பெற்றது.

மகாநதி: கமலஹாசன் நடித்த மகாநதி படத்தில் ராஜேஷ் முத்துசாமி என்னும் கேரக்டரில் நடித்திருப்பார்.

எந்த குற்றமும் செய்யாத கமல் ஜெயிலில் இருந்து வந்த பிறகு அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் போலீஸ் கேரக்டர் தான் ராஜேஷுக்கு. இறுதியாக கமலின் மகளையே தன் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்.

ஆட்டோகிராஃப்: ஆட்டோகிராஃப் திரைப்படத்தில் ராஜேஷ், சேரனின் அப்பாவாக நடித்திருப்பார்.

முதல் முறையாக மகன் அரும்பு மீசையை ஷேவிங் மெஷின் வைத்து ஒதுக்கியது தெரிந்து கோவப்படும் காட்சியில் மலரும் நினைவுகளை அள்ளி தெளித்திருப்பார்.

காதல் தோல்வியால் திசை மாறி போன மகனுக்கு ஆறுதல் கொடுக்கும் காட்சிகளிலும் நிஜ தந்தையாக மிளிர்ந்து இருப்பார்.

தர்மதுரை: தர்மதுரை படத்தில் ராஜேஷுக்கு டாக்டர் காமராஜ் என்னும் கேரக்டர்.

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியோடு, வாழ்வியலையும் சொல்லி கொடுக்கும் பேராசிரியர்.

இறுதியில் பார்வை இழந்து தன்னிடம் பயின்று மருத்துவரான விஜய் சேதுபதியை சந்திக்கும் காட்சியில் கலங்க வைத்திருப்பர்.

கோவில்: சிம்பு மற்றும் சோனியா அகர்வால் நடித்த கோவில் படத்தில் ராஜேஷ் சர்ச் பாதர் அந்தோணி ஜேம்ஸ் ஆக நடித்திருப்பார்.

மதத்தில் ஊறிப்போன நாசரை, ராஜேஷ் இந்த படத்தில் ஒரு சர்ச் பாதர் ஆக அணுகும் விதம் பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தும்.

அதே மாதிரி சோனியா அகர்வால் பற்றிய உண்மையை இவர் சபையில் சொல்லும் காட்சியும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கும்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.