Vishal : நடிகர் விஷால் அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகர். அதுமட்டுமல்லாமல் இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் அனைத்துமே மக்கள் மத்தியில் நின்று பேசக்கூடியவை.
இவர் நடித்து பெரும்பாலும் படங்கள் தோல்வியடைந்தது இல்லை. இடைவெளி விட்டு இவர் படம் கொடுத்தாலும் இவர் தேர்வு செய்யும் கதைக்களம் நன்றாக அமையும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
அதுமட்டுமல்லாமல் இவர் துப்பறிவாளன்-2 படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகவுள்ளார். அதுமட்டுமல்லாமல் “கருப்புராஜா வெள்ளை ரோஜா” இதுபோல 3 படங்களுக்கு மேல் கைவசம் படங்களை வைத்துள்ளார்.
பொண்ணு ரெடி, மாப்பிள்ளை ரெடி, அது மட்டும்தான் இன்னும் ரெடி ஆகல..
இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல், நடிகர் சங்கத்திலும் முக்கியமான பொறுப்பில் உள்ளார். இவர் தற்போது அளித்த பேட்டி ஒன்றில், 9 வருடம் ஆகிவிட்டது, இன்னும் 2 மாத காலம்தான், நடிகர் சங்க கட்டிடம் திறக்க நான் பொறுத்துக்கொள்வேன்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் சங்க கட்டிடம் திறந்து என்னுடைய திருமணம் தன முதல் திருமணம் எனவும் கூறியுள்ளார். அப்போ திருமணத்திற்கு மாப்பிளை ரெடி ஆகிவிட்டார். பொண்ணு நம்ம சாய் தன்ஷிகா தான்.
இவர்கள் இருவரும்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என இவர்கள் தகவலையும் தெரிவித்து விட்டனர். அப்புறம் என்ன கட்டிடம் திருத்தும் முதல் கல்யாண சாப்பாடு நடிகர் விஷால் அவர்களோடதுதான்.