Simbu : தற்போது தமிழ் சினிமாவின் டாப் லிஸ்டில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் சிம்பு. “சிம்பு ரசிகர்கள் டா” என்று சொல்லிக் கொண்ட ஒரு ரசிகர்கள் கூட்டமே சிம்புக்காக தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். தொடர்ந்து சிம்புவை பற்றிய அப்டேட்டுகள் வலைத்தளங்களில் வந்த வண்ணமே இருக்கிறது.
2023 இல் சிம்புவின் பத்து தல திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற்று என்ன செய்வது? சினிமா வட்டாரத்தை பொருத்தவரைக்கும் உலக அளவில் 55 கோடி மட்டுமே வசூல் செய்து சுமாரான வெற்றியை தான் கொடுத்துள்ளது.
இந்த வருடம் கமல், திரிஷா, சிம்பு என மூன்று பிரபலங்களுமே நடித்து வெளியான திரைப்படம் தான் தக்கலைப். படம் வெளியாவதற்கு முன்னாடி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. திரைப்படம் வெளியாகி எதிர்பார்ப்பு மொத்தமும் தூசியாகி போனது.
சிம்பு மற்றும் த்ரிஷாவை வைத்து பயங்கரமான மீம்ஸ்கள் வலைத்தளத்தில் கிளம்பியது. முழு கதையையும் கேட்டு ஒத்துக்கொண்டது தப்புதான் என்று தன்னை தட்டிக் கொண்டார் சிம்பு. “முடிஞ்சது முடிஞ்சு போச்சு இனி நடக்கிறத பாப்போம்” என்று யோசித்து இப்போது புது படத்தில் களமிறங்கியிக்கிறார்.
இயக்குனர் பாலகிருஷ்ணா இயக்கத்தில் தனது 49-ஆவது திரைப்படத்தில் நடிக்கிறார் சிம்பு. திரைப்படத்திற்கு தற்காலிகமாக STR-49 என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். சிம்புவின் தக்லைப் திரைப்படத்தின் விமர்சனமே குறையாத நிலையில் அடுத்த படத்திற்கு ரெடியான சிம்புவின் தைரியத்தை பாராட்டி தான் ஆக வேண்டும்.
இந்நிலையில் STR மேடையில் பேசியது ரசிகர்களுக்கே ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ” இனிமேல் நான் என்ன பண்றேன்னு பாத்துட்டு ஏசி ரூம்ல ஜாலியா, கூலா பாருங்க, நான் திரும்ப வந்துட்டேன் அதுவும் சாதாரணமா வரல, வேற மாதிரி வந்திருக்கேன் விடவே மாட்டேன்” ரசிகர்கள் மத்தியில் மேடையில் இப்படி பேசிய சிம்புக்கு பயங்கரமான கைதட்டுகள் மட்டுமின்றி, அடுத்த படத்திற்கான வரவேற்புகளும் கிடைத்தது.