Ajith : நடிகர் அஜித்குமார் அவர்கள் சினிமாவில் மேலும் மேலும் உச்சத்திற்கு போய்க்கொண்டிருக்கிறார். இவர் அடிக்கடி அப்டேட் கொடுத்து ரசிகரங்களை கொண்டாட செய்கிறார்.
தற்போது “AK 64” படத்தை பற்றிய அப்டேட் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருந்தார். தற்போது ரேசிங்கில் அஜித் குமார் கலந்து கொள்வது குறித்து அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
“AK 65” படத்திற்க்கு அப்டேட் வந்தாச்சு..
தற்போது அஜித் அவர்கள் ரெஸிங்கில் விபத்து ஏற்பட்டு தப்பித்து ஈண்டும் ஒரு மோட்டிவேஷனல் நபராக ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். தற்போது அஜித் “AK 65” படத்தின் அப்டேட் வந்துள்ளது.
அதாவது அஜித் அவர்களும் கார்த்திக் சுப்புராஜ் அவர்களும் இனனிந்து ஒரு படம் செய்ய போகிறார்களாம். இந்த படத்தின் கதையை அஜித் கேட்டு மிகவும் பிடித்து போய் ஓகே சொல்லிவிட்டார் என்ற தகவல் கசிந்து வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் சூர்யா நடித்து வெளிவந்து “ரெட்ரோ” படத்தின் இயக்குனர் ஆவர். அதுமட்டுமல்லாமல் இவர் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் கூட இவர் இயக்கம் அனைத்துமே அருமையாக இருக்கும்.
“AK 65” படம் கண்டிப்பாக கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கத்தில் தான் தாயாராக போகிறது என்று திரை வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. இந்த புதிய கூட்டணி அஜித் அவர்களுக்கு கை கொடுக்குமா என்று பார்க்கலாம். “AK65” படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.