logesh kanagaraj : லோகேஷ் கனகராஜ் அவர்கள் சிறந்த இயக்குனர் என்பதை தாண்டி நல்ல தயாரிப்பாளர். இவர் தனக்கென “G squard” என தயாரிப்பு நிறுவனமும் வைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இவர் தற்போது கூலி படத்திற்காக ஒரு நாள் கூட ஓய்வெடுப்பாரா என்பது தெரியவில்லை அந்த அளவிற்க்கு நேர்காணலை கொடுத்து வருகிறார். இவர் தற்போது அளித்துள்ள நேர்கணல் ஒன்றில் இவர் தனது நண்பனுக்காக ஒரு படம் தயாரிக்க போகிறாராம்.
Friend -காக படம் தயாரிக்க போறேன்..
இவரது நெருங்கிய நண்பன் ரத்தினம் ஒரு படத்தை தானே இயக்க விடும் என்று கூறி வருகிராம். அதுமட்டுமல்ல கதையும் எழுதி கொண்டிருக்கிறராம்.இவர் தனது நண்பன் இயக்கவிருக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் மட்டுமல்ல இவரது “G squard” நிறுவனமும், பிரபல தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் “Stone Bench Creations” இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
அப்போ இனிவரும் காலங்களில் தொடர்ந்து பிசியாக இருக்கபோகிறார் லோகேஷ். இதெற்கெல்லாம் திட்டம் தீட்டி வைத்து விட்டுதான் . கூலி ரிலீஸ்க்கு பின் தலைமறைவாக போகிறேன் என தெரிவித்துள்ளார் போல. சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு தனது பணிகளை பார்துகொல்லாம் என முடிவெடுத்துள்ளார் லோகேஷ்.
மற்றுமொறு விஷயம் என்னவென்றால் வளர்ந்ததற்கு பிறகு தன்னிலை மறவாதவன், தனது கஷ்ட காலங்களிலில் கூட இருந்தவரையும் உயர்த்தி விட வேண்டும் என்ற நல்ல எண்ணமே நம்ம மேலும் உயரத்திற்கு அழைத்து செல்லும்.
அந்தவகையில் லோகேஷ் அவர்கள் தனது நண்பனையும் தூக்கி விட வேண்டும் என நினைப்பது நல்ல விஷயம். இந்த எண்ணத்திற்காகவே இவர் மேலும் மேலும் உயரத்தை அடையப்போகிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.