Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் இப்போது கூலி பட ப்ரோமோஷனில் பிஸியாக இருக்கிறார். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த சூழலில் கூலி படத்தில் சிறப்பு தோற்றத்தில் அமீர்கான் நடித்துள்ளார்.
மேலும் அமீர் கானை வைத்து தனியாக ஒரு படத்தை லோகேஷின் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதுவும் கார்த்தியின் கைதி 2-க்கு பிறகு இந்த படம் ஆரம்பிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வேறு ஒரு ஹீரோவை தான் லோகேஷ் புக் செய்து இருக்கிறார்.
அதாவது தனுஷ் இடம் கதை சொல்லி லோகேஷ் சம்மதம் வாங்கி இருக்கிறாராம். இந்த படம் கைதி 2 பிறகு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இது எல்சியு கான்செப்டில் வர இருக்கிறதாம். அதனால் கார்த்தி, கமல், விஜய், சூர்யா போன்று இப்போது தனுஷும் இதில் இணைந்திருக்கிறார்.
கைதி 2 படத்திற்கு பிறகு லோகேஷ் உடன் இணையும் ஹீரோ
இந்த படத்திற்கு சாம் சிஎஸ் தான் இசையமைக்கிறார். பொதுவாகவே லோகேஷின் படங்களில் அனிருத் தான் இசையமைப்பார். ஆனால் லோகேஷ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சாம் சி எஸ்-யை தேர்வு செய்து இருக்கிறார்கள்.
தனுஷ் இப்போது இட்லி கடை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இளையராஜாவின் பயோபிக், பார்க்கிங் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படம், ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் படத்திலும் நடிக்க உள்ளார். மேலும் சிம்புவை வைத்து வெற்றிமாறன் இப்போது ஒரு படம் எடுத்து வரும் நிலையில் வடசென்னை 2 படத்தை தனுஷை வைத்து எடுக்க இருக்கிறார். இவ்வாறு தனுஷின் லைன் அப் பிரம்மாண்டமாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் லோகேஷ் உடன் அவர் இணைவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.