LIK: முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது விக்னேஷ் சிவனின் சினிமா வாழ்க்கை. எந்த நேரத்தில் அஜித்தின் 62 ஆவது படம் அவர் கையை விட்டுப் போனதோ அதிலிருந்து அவருக்கு சோதனை மேல் சோதனை தான்.
எப்படியோ ஆற்றி, தேற்றி பிரதீப் ரங்க நாதனை தன்னுடைய LIK படத்தில் நடிக்க வைத்தார். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி நாளுக்கு நாள் சவ்வாய் இழுத்துக் கொண்டு இருக்கிறது.
பின்னணி காரணம்!
இதற்கு பட குழு பல காரணங்கள் சொல்லிய போதும் தற்போது உண்மை காரணம் வெளிவந்திருக்கிறது. விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு இயக்கிய மற்ற இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
திரைத்துறையிலும் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆகிவிட்டது. இதனாலேயே இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை இன்னும் வியாபாரம் ஆகவில்லையாம். இதனால் தான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாமல் இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ் ஜே சூர்யா இருந்தே இப்படி ஒரு நிலைமை இந்த படத்திற்கு வந்திருக்கிறது என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.