Star Tamil chat Star Tamil Chat

OTT த்ரில்லர் படம்: மிரட்ட வரும் கௌதம் கார்த்திக் – Cinemapettai

Tamil Cinema News

நெட்ஃபிளிக்ஸ் எப்போதும் தனது சப்ஸ்க்ரைபர் களுக்கு வித்தியாசமான கதைக்களங்கள், கண்ணைக் கவரும் தயாரிப்புகளை தருகிறது. அந்த வரிசையில் தற்போது உருவாகி வரும் பெரிய பட்ஜெட் ஆக்‌ஷன் த்ரில்லர் லெகசி ரசிகர்களிடையே ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க, திறமையான இளம் இயக்குனர் சாருகேஷ் இயக்குகிறார். கடந்த 100 நாட்களாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. கடற்கரை பின்புலத்தில் உருவாகும் இந்த கதை, உலகத் தரத்தில் ஒரு ஆக்ஷன் அனுபவத்தை நெட்ஃபிளிக்ஸ் மூலம் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடிப்பு அணியைக் கவனித்தாலே ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுகிறார்கள். பல்வேறு மொழிகளில் தங்களது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஆர். மாதவன், இளைய தலைமுறையின் ஹார்ட்-துரோப் துல்கர் சல்மான், அதேபோல் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஸ்வாசிகா விஜயன், நிமிஷா சஜ்ஜயன், மற்றும் பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ஆகியோர் இணைந்து நடிப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

இந்தப்படத்தின் கதையைப் பற்றி தயாரிப்பு தரப்பில் ரகசியம் காக்க பட்டாலும், “லெகசி” ஒரு இன்டென்ஸ் ஆக்ஷன்–டிராமா ஆக இருக்கும் என்று தொழில்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. கடல் சார்ந்த சண்டைக் காட்சிகள், தொழில்நுட்ப ரீதியாக தரமான VFX, மற்றும் ஹை-ஆக்டேன் ஆக்ஷன் சீக்வென்ஸ்கள் ரசிகர்களை கட்டிப்போடும் என்கிறார்கள்.

நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் தொடர்ந்து தனது Original Tamil Content-ஐ வலுப்படுத்தி வரும் நிலையில், “லெகசி” அந்த முயற்சிக்கு ஒரு பெரிய மைல்கல் ஆக அமையப்போகிறது. கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு என்பதால், கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்பம் இரண்டிலும் புதிய அளவை தொட்டுக் காட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே Legacy என்ற ஹாஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். படம் விரைவில் போஸ்ட்-பிரொடக்ஷன் பணிகளில் இறங்கவிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் இதற்கென சிறப்பு ப்ரமோஷன் டிரைவ் ஒன்றையும் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

“லெகசி” வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஆனால், 2025-ல் நெட்ஃபிளிக்ஸில் வெளியிடும் மிகப்பெரிய தமிழ் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது எதிர்பார்க்கப்படுகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.