Thalaivan Thalaivi : விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திற்கு பிறகு ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை தலைவன் தலைவி படம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் தேசிய விருது வாங்கிய நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது தலைவன் தலைவி.
இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில் இப்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி ஆகாச வீரன், கதாபாத்திரத்திலும் நித்யா மேனன் அரசி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
அன்னோனியமாக இருக்கும் தம்பதிகளாக வாழ வேண்டும் என்று திருமணம் செய்து கொள்ளும் இவர்களுக்குள் நடக்கும் அழகான சண்டைகளை கொண்டிருக்கிறது இந்த படம். விஜய் சேதுபதி அம்மா மற்றும் மனைவி இடையே மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.
தலைவன் தலைவி ட்ரெய்லர் எப்படி இருக்கு?
பிரியவே கூடாது என்று திருமணம் செய்து கொள்ளும் இவர்கள் பிரியும் நிலைக்கு வருகிறார்கள். கடைசியில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் தலைவன் தலைவி. எல்லா குடும்ப வாழ்க்கையிலும் நடக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையோடு சொல்லும் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
அதுவும் நித்யா மேனன் நடிப்பை சொல்லவே வேண்டாம். கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் கெமிஸ்ட்ரி படத்தில் சூப்பராக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்த படம் ஜூலை 25ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது.
தலைவன் தலைவி ட்ரெய்லர் வெளியாகி படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. ஒரு ரகடான காதல் கதையை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். விஜய் சேதுபதியின் பிளாக்பஸ்டர் ஹிட் லிஸ்டில் இந்த படம் இடம்பெறுகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.