Housemates Review : புதுமுக இயக்குனரான ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், ஆர்ஷா சாந்தினி, காளி வெங்கட், வினோதினி மற்றும் பலர் நடிப்பில் உருவான ஹவுஸ்மேட்ஸ் படம் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் விஜயபிரகாஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.
ஹவுஸ்மேட்ஸ் படம் சயின்ஸ் பிக்சன், ஹாரர், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். தர்ஷன் மற்றும் ஆர்ஷா இருவரும் புதுமண தம்பதிகளாக உள்ள நிலையில் ஒரு பழைய அப்பார்ட்மெண்டுக்கு குடியேறுகிறார்கள்.
ஆனால் அந்த வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக உணர்கிறார்கள். அதே நேரத்தில் வேறு காலகட்டத்தில் அதே வீட்டில் வாழும் காளி வெங்கட் மற்றும் வினோதினி குடும்பமும் இதே போன்ற விசித்திரமான சம்பவங்களை உணருகிறார்கள். டைம் டிராவல் போல இரு குடும்பங்களையும் இணைத்து தங்களது வீட்டை மீட்க எவ்வாறு உதவுகிறார்கள் என்பதுதான் ஹவுஸ்மேட்ஸ்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் விமர்சனம்
படத்தில் பிளஸ் பாயிண்ட் என்றால் புதுமுக இயக்குனராக ஒரு துணிச்சலான கதையை கையாண்டு இருக்கிறார். மேலும் தர்ஷன், ஆர்ஷா ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்திற்கு பக்காவாக நடித்த நிலையில், காளி வெங்கட் எப்போதும் போல இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆரம்பத்தில் காமெடியில் தொடங்கிய படம் அதன் பிறகு ஹாரர், ஃபேண்டஸி என ரசிகர்களை என்டர்டைமென்ட் செய்திருக்கிறது. ஒரு பதற்றமான சூழலுக்கு ஏற்றவாறு இசையை கொடுத்திருக்கிறார் ராஜேஷ் முருகேசன். இவர் தான் பிரேமம் படத்திற்கும் இசையமைத்திருந்தார்.
அதேபோல் படத்தின் ஒளிப்பதிவும் அற்புதமாக இருக்கிறது. ஹவுஸ்மேட்ஸ் படத்தில் மைனஸ் என்றால் தொடக்கம் மிகவும் மெதுவாக நகர்கிறது. எடிட்டிங்கில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். மற்றபடி நல்ல என்டர்டைன்மென்ட் படமாக இருப்பதால் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் கல்லா கட்டுவார்.
சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5