Sivakarthikeyan : தொகுப்பாளராக இருந்து இன்று ஒரு டாப் நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். என்னதான் டாப் நடிகராக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் மவுஸ் இல்லை என்பது தற்போது சிவகார்த்திகேயன் விஷயத்தில் தெரிகிறது.
சிவகார்த்திகேயன் நடித்து முடித்து, வெளியாகவுள்ள மதராசி திரைப்படம் நிச்சயம் வெற்றி வரவேற்பு கிடைக்கும் என நினைத்து மதராசி படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் 40 கோடிக்கு வாங்கியது. சாட்டிலைட் உரிமையை ஜி 26 கோடிக்கு வாங்கியது.
பெரிய ஹீரோவின் படம் என்பதால் இவ்வளவு தொகையை முதலீடு செய்கிறார்கள். மதராசி திரைப்படம் இதுவரை சிவகார்த்திகேயன் நடிக்காத கதை தோற்றத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைத்த நடிகர்..
இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், பிரதீப் ரங்கநாதன் திரையில் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் லவ் டுடே. அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் ஓடியதில் கிட்டத்தட்ட இரண்டு நாளில் மட்டும் 16.75 கோடி லாபம் பார்த்தனர்.
தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி செப்டம்பர் 18 வெளியாகும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தத் திரைப்படம் நிச்சயம் பிரதீப் ரங்கநாதனுக்காக இளைஞர்கள் கூட்டம் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமேசான் பிரைமில் இருந்து அனைத்து ஒடிடி தளங்களும் இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை அதிக கோடி கொடுத்து வாங்க 100% வாய்ப்பு இருக்கிறது. அதே வேலையில் சிவகார்த்திகேயனின் மதராசி படம் வெளியாவதால், சற்று SK மார்க்கெட் இறங்கி விடும் வாய்ப்பு இருக்கலாம் என சினிமா வட்டாரம் பேசி வருகிறது.