தமிழ் சினிமாவில் தல அஜித் என்ற பெயரே Box Office-க்கு ஒரு பெரிய மந்திரம். ரசிகர்களின் மாபெரும் ஆதரவால், அவரது படங்கள் திரையரங்கிலும் OTT-யிலும் சாதனை படைக்கின்றன. ஆனால், தற்போது அஜித்க்கு சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான விவாதம் நடந்து வருகிறது – ஏகே 64 (AK 64) படத்துக்காக அவர் கேட்டு வரும் அதிக சம்பளம். இந்த சம்பள டிமாண்ட் காரணமாகவே பட தயாரிப்பில் சில குழப்பங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த கட்டுரையில் அந்த விவகாரம், சினிமா தொழில்துறை ரீதியான தாக்கங்கள், ரசிகர்கள் எதிர்பார்ப்பு ஆகியவற்றைப் பார்க்கலாம்.

அஜித்தின் மார்க்கெட் நிலை
அஜித் படங்கள் எப்போதும் மாஸ் ஓப்பனிங் தரக்கூடியவை. “வலிமை”, “ விசுவாசம்”, “ வேதாளம்” போன்ற படங்கள், முதல் நாள் Box Office கலைக் கொண்டு சென்றவை. தமிழ் மட்டுமின்றி, தென்னிந்தியாவின் பல பகுதிகளில் Ajith க்கு வலுவான ரசிகர் அடிப்படை இருக்கிறது.
- அஜித் படங்களுக்கு OTT rights, Satellite rights என்பவை முன்பே உயர்ந்த விலைக்கு விற்கப்படும்.
- இதனால், தயாரிப்பாளர்களுக்கு Production cost அதிகமாக இருந்தாலும், Pre-release revenue மூலமே பெரிய தொகையை சம்பாதிக்க முடிகிறது.
ஏகே 64: எதிர்பார்ப்புகள் vs. சவால்கள்
அஜித்தின் அடுத்த படமாக வரும் ஏகே 64 பற்றி ரசிகர்கள் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். படம் எந்த Director-யின் கையில் உள்ளது, என்ன மாதிரியான கதை இருக்கும், action-க்கு அதிக weightage இருக்குமா என்பதில் பல்வேறு பேச்சுக்கள் நடந்துவருகின்றன. அந்த வகையில் ஏகே 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகிவிட்டது.
தயாரிப்பாளர்களின் கவலை
படத்தின் Story, Casting, Technical Crew அனைத்தும் finalize ஆகிக் கொண்டிருக்கும் நிலையில், அஜித் கேட்டு வரும் சம்பளமே மிகப்பெரிய பேசுபொருளாக உள்ளது. Industry reports படி, அஜித் தனது கடந்த படங்களை விட மிக அதிகமான சம்பளம் டிமாண்ட் செய்துள்ளார். இது Budget-யை balance செய்ய தயாரிப்பாளர்களுக்கு சிக்கலாக உள்ளது.
தமிழ்சினிமா Production Cost
இப்போது தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ஹீரோ படம் எடுக்க அடிப்படை செலவுவே 150–200 கோடி வரை செல்லும். இதில் நடிகர் சம்பளம், Set design, VFX, Overseas distribution, Marketing அனைத்தும் சேரும். Ajith-ன் சம்பளம் அதிகமாக இருந்தால், அந்த Production cost மேலும் உயர்ந்து விடும்.
Break-even சவால்
படம் Box Office-ல் மிகப்பெரிய ஹிட் ஆனாலும் கூட, Budget அதிகமாக இருந்தால் Break-even point அடைய சிரமம் வரும். அதேசமயம், OTT & Satellite revenue அதிகமாக கிடைத்தாலும், Market saturation ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆனாலும் அஜித்தின் ரசிகர்கள் பலரும், அவர் hard work மற்றும் Stardom-க்கு ஏற்ப அதிக சம்பளம் கேட்பது முற்றிலும் நியாயம் என்று வாதிடுகின்றனர். ரஜினி விஜய் போன்ற டாப் நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கும்போது, அஜித்க்கும் அதே level-ல் சம்பளம் கேட்பது சாதாரணம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
தயாரிப்பாளரின் கருத்து
மறுபக்கம், சில ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் கூறுவது – சம்பளம் அதிகமாக இருந்தால் Producer-களுக்கு loss வரும். ஒரு படம் flop ஆனால், அந்த financial pressure அதிகமாகும். இதனால் அடுத்தடுத்த projects-களும் பாதிக்கப்படும் அபாயம் உண்டு.
விஜய் vs அஜித்
தமிழ்சினிமாவில் சம்பள போட்டியில் விஜய் அஜித் இருவரும் எப்போதும் முன்னணியில் உள்ளவர்கள். லியோ படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம், வலிமை துணிவு படங்களுக்கு அஜித் பெற்ற சம்பளம் ஆகியவை Industry-யில் பேசப்பட்டு விஜய்க்கு தான் அதிக சம்பளம் என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்டேட்டஸ் பார்க்கும் அஜித் அடுத்து நடிக்கப் போகும் படத்திற்கு அதிக சம்பளத்தை கேட்டு டிமாண்ட் பண்ணி வருகிறார். இதனால் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
நிலையான வணிக முறை
தமிழ் சினிமா வளர வேண்டுமெனில், ஒரு நிலையான வணிக முறை தேவைப்படுகிறது. நடிகர் சம்பளம், தயாரிப்பு நிலை, விநியோக வருவாய் ஆகியவை சமநிலைப்படுத்தப்பட வேண்டும். Box Office மட்டும் அல்லாமல், OTT, , Dubbing rights ஆகியவற்றை சரியாக பயன்படுத்தினால், அதிக சம்பளம் கொடுத்தாலும் தயாரிப்பாளர்கள் லாபத்தை காணலாம். அஜித் படம் என்றால் opening இருக்கலாம்; ஆனால் Long run-க்கு கதை, screenplay, emotion தான் நிலைநிறுத்தும்.