Simbu : சிம்பு முன்பு போல இல்லை ரொம்ப மாறிட்டார் என்ற விமர்சனங்கள் தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது என சில விஷயங்களை செய்து வந்திருக்கிறார். இதனால் படக்குழுவுடன் வாக்குவாதங்களும் ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் தொடர் தோல்விக்கு பிறகு மாநாடு படத்தின் வெற்றியை அடுத்து அவர் மொத்தமாக மாறிவிட்டார். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். உடலாலும், மனதாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு வருகிறார்.
இந்த சூழலில் கதை தேர்வில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தேசிங்கு பெரியசாமி படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் இதற்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
மொத்தமாக மாறிய சிம்பு
தேசிங்கு பெரியசாமிக்காக தொடர்ந்து பல தயாரிப்பு நிறுவனங்கள் இடம் சிம்பு பேசி உள்ளார். எதுவும் வேலைக்கு ஆகாத நிலையில் தானே அந்த படத்தை தயாரிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.
அந்த அளவுக்கு தேசிங்கு பெரிய சாமியின் கதை சிம்புவுக்கு பிடித்திருக்கிறது. ஆகையால் இந்த படத்தை வேறு யாருக்கும் விட்டுத் தரக்கூடாது என்பதிலும் முனைப்பாக இருக்கிறார். இதுவே மாநாடுக்கு முன்பாக இருந்தால் சிம்பு இந்த அளவுக்கு மெனக்கெடுவாரா என்பது சந்தேகம் தான்.
ஆனால் இப்போது ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாக கையாண்டு வருகிறார். தக் லைஃப் படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்த நிலையில் அது எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. இப்போது வெற்றிமாறனை நம்பி சிம்பு இறங்கிய நிலையில் வெற்றி நிச்சயம் என்று அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.