“The Dark Knight” 2008-ல் வெளிவந்த பிரபல ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படமாகும். கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், பேட்மேன் கதாபாத்திரத்தில் கிறிஸ்டியன் பேல், ஜோக்கராக ஹீத் லெட்ஜர் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். இந்த படம் போன்று தற்போது தமிழில் சூப்பர் ஹீரோ படம் எடுக்கபோவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் புஷ்கர் காயத்ரி இந்த படம் ரீமேக் பண்ணால் பேட்மேனாக நடிக்கத் தகுதியானவர் அஜித்தான் என்றும். பேட்மேன் படத்தை போன்று ஒரு கதை இருப்பதாகவும், அதில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சி எடுப்பேன் என்று கூறி உள்ளார்.
2025-ம் ஆண்டில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து பிக் பட்ஜெட் படத்தில் புஷ்கர்-காயத்ரி கூட்டணியில் அவர் “Dark Knight” டைப் கதையின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படம், தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூப்பர் ஹீரோ பட திட்டத்தில் முக்கியமான வேறு ஒரு திருப்பமாக, வில்லன் ஜோக்கர் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பதாக தகவல்கள் லீக் ஆகியுள்ளது. ஏற்கனவே அவர் வில்லன் கதாபாத்திரத்தில் சக்கை போடு போட்டு வருகிறார். இப்ப ஜோக்கர் கேரக்டர் வேற.
இந்தத் திட்டம் தற்போது ஸ்கிரிப்ட் வேலைகளில் உள்ளது. முழுமையான தயாரிப்பு 2026 தொடக்கத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அஜித், எஸ் ஜே சூர்யா கூட்டணியை ஆவலுடன் ரசிகர்கள் எதிர் பார்த்துக் கொண்டுள்ளனர்.
இது போன்ற ஹாலிவுட் தரமான கதைகளை, உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி, தரமான நடிப்புடன் வழங்கும் முயற்சி தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.