தமிழ் சினிமா கடந்த சில ஆண்டுகளில் விஞ்ஞான ரீதியான (Sci-Fi) கதைகளில் புதிய முயற்சிகளுடன் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. ஹாலிவுட் தரத்தில் உருவாகிய பல திரைப்படங்கள் தமிழிலும் வந்துள்ளன. அந்த வகையில் மிக சிறப்பாக வெளிவந்த முக்கியமான திரைப்படங்களை இப்போது பார்ப்போம்.
2010-ம் ஆண்டு, ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் science fiction உலகத்துக்கு ஒரு பெரிய துவக்கமாக அமைந்தது. அதில் ரஜினி இரட்டை வேடங்களில் அசத்த, ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்தார். அதன் பின், 2015-ல் ரவிக்குமார் இயக்கிய இன்று நேற்று நாளை என்ற டைம் டிராவல் படம் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியது.
24 என்ற திரைப்படம், 2016-ம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்து, தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. மூன்று வேடங்களில் நடித்த சூர்யா ரசிகர்களை மெய்மறக்க வைத்தார், மேலும் ரஹ்மானின் இசை பிரமித்தது. அதேபோல், 2021-ல் வெளிவந்த வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா தங்கள் வித்தியாசமான நடிப்பால் படம் முழுமையாக மின்னியது.
எந்திரனுக்கு பின் உடைந்து போன சங்கர்
2024-ல் வெளியான பிளாக் என்ற திரைப்படம், கே.ஜி.பாலசுப்பிரமணியின் இயக்கத்தில், ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வந்தது. ஹாலிவுட் தரமான டெக்னிக்கில் உருவான படம் என்பதாலேயே அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இளையர்களை கவர்ந்த அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நகைச்சுவையுடன் விஞ்ஞான கதையை எளிமையாக புரியவைத்தார்.
2.0 என்ற படமும், எந்திரன் தொடர்ச்சியாக 2018-ல் வெளிவந்து, ஷங்கர் – ரஜினி கூட்டணியுடன் அக்ஷய் குமாரும் இணைந்திருந்தார். சிறந்த CG வேலை மற்றும் விசுவாசமான வரவேற்பு பெற்ற படம். மார்க் ஆண்டனி படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா, டைம் டிராவலை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றனர், அதில் ஜி.வி. பிரகாஷ் இசை சேர்ந்து ருசி கூட்டியது.
டிக் டிக் டிக் திரைப்படம் தமிழில் முதலாவது ஸ்பேஸ் அடிப்படையிலான திரைப்படமாக சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்தது. இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்தனர். மேலும் அடியே என்ற திரைப்படம் alternate universe ஐ மையமாகக் கொண்டு, விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ரசிகர்களை புதிய அனுபவத்தில் அழைத்துச் சென்றது.
Science Fiction என்றாலே Hollywood என்று சொல்வதை தமிழ்சினிமா மீறி நிரூபித்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பல Science Fiction படங்கள் வருவதை நம்மால் எதிர்பார்க்க முடிகிறது.