Television : தமிழ்நாட்டில் உள்ள 90% சேனல்களில் அதிகமாக ஒளிபரப்பு செய்யப்படுவது சீரியல்கள்தான். குழந்தை முதல்ல பெரியவர் அவரை அனைவரும் இந்த காலகட்டத்தில் சீரியலுக்கு அடிமையாகி உள்ளனர். தினம்தோறும் ஒளிபரப்பு செய்யப்டுவதால் தொடர் ரசிகர்கள் உள்ளனர்.
அதுவும் குடும்ப பெண்களை கருத்தில் கொண்டுதான் சீரியல்கள் உருவாக்கப்படுகின்றன. குடும்ப கதைதான் சீரியலில் எடுப்பதால் அனைவரும் இதை தினசரி பார்த்துக்கொண்டுதான் வருகின்றனர். அந்த அந்த வகையில் ஜூன் மாத இறுதியில் எடுத்த கணக்கெடுப்பில் TRP ரேட்டிங்கில் முதல் 5 இடத்தை பிடித்த சீரியலை பற்றி பார்க்கலாம்.
கடைசி இடத்தில் எதிர்நீச்சல்-2..
கயல் : கயல் சீரியல் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பு ஆகிறது. இந்த சேற்றில் சில கடலாக தொடர்ந்து TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. அப்பாவை இழந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண் அவளை சுற்றியுள்ள பிரச்சினைகளை சமாளித்து எவ்வாறு குடும்ப நபர்களின் வாழ்க்கையை முன்னேறவைக்கிறாள் என்பதே கதை.
மூன்று முடிச்சு : இந்த தொடரும் சன் டிவியில் ஒளிபரப்பாகும். இந்த சீரியலில் வேலைக்காரியாக இருந்த பெண் தனது அந்தஸ்தை மீறி ஒருவரை திருமணம் செய்து செல்கிறாள் அதும் அவள் விருப்பம் இல்லாமல். கணவனின் துணையோடு அவள் புகுந்த வீட்டில் சமாளிக்க போகும் பிரச்சினைகளை பற்றிய கதை.
சிங்கப்பெண்ணே : ஆனந்தி என்கிற கிராமத்து பெண் நகரத்திற்கு வந்து அவள் இலக்கை அடைவதற்கு அவள் படும் இன்னல்கள், அவளின் தைரியம் ஆகியவற்றை பற்றி பேசும் ஒரு தொடர். இது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சிறகடிக்க ஆசை : இது விஜய் டிவியில் ஒளிபரப்பாக விறுவிறுப்பாக செல்லும் ஒரு சீரியல். இந்த சீரியலில் பணத்தாசை பிடித்த மாமியார், அதை சமாளிக்கும் மூன்று மருமகள்கள் மற்றும் அவர்களை சுற்றுயுள்ள நபர்களின் கதைகள் என கதை விறுவிறுப்பாக செல்லக்கூடிய ஒரு தொடர்.
எதிர்நீச்சல் 2 : இந்த சீரியல் சன் டிவியில் விறுவிறுப்பின கதைக்களத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. பெண்கள் தன வீட்டிலுள்ள ஆண்களை சமாளித்து எவ்வாறு எதிர்நீச்சல் போட்டு தன் இலட்சியத்தை அடைய போகிறார்கள் என்பதே கதை. தற்போது இந்த சீரியல் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது
தொடர்ந்த்து ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் மாற்றி மாற்றி அவர்களின் இடத்தை பரிமாறிக்கொள்கின்றன. இதில் உள்ள top 5 சீரியல்களை மறுபடியும் தன் இடத்தை மாற்றிகொள்ளவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அது கதையையும், மக்களின் மனநிலைமையும் பொறுத்ததே.