TVK-Vijay: 2526 தேர்தல் நாம் எதிர்பார்க்காத பல சர்ப்ரைஸ் கொடுக்கும் என சோசியல் மீடியாவில் பல விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் விஜய் தன்னுடைய இலக்கை எட்டுவாரா என்ற கேள்வியும் உள்ளது.
தேர்தலில் களம் இறங்கும் முதல் முறையே முதல்வர் நாற்காலி எங்களுக்கு தான் என டிவிகே நம்பிக்கையோடு இருக்கிறது. அதேபோல் விஜய் தன்னுடைய அரசியல் எதிரி ஆளும் கட்சி தான் என தெளிவாக சொல்லிவிட்டார்.
அது மட்டும் இன்றி 2026 தேர்தலில் TVK, DMK மோதல் இருக்கும். சொல்லப்போனால் இந்த இரு கட்சிகளுக்குள் தான் போட்டி என அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார். அதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்து எங்கள் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என கூறியிருந்தனர்.
அதிமுக அழிவு ஆரம்பம்
ஆனால் அது நடக்காது என வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி தெரிவித்துள்ளார். ஏனென்றால் அதிமுக சுய லாபத்திற்காக தங்களுடைய கட்சியை அமித்ஷாவிடம் அடகு வைத்து விட்டனர்.
அது மட்டும் இன்றி மத்திய ஆளும் கட்சிக்கு அடிமையாக இருக்கின்றனர். அதனால் வரப்போகும் தேர்தலில் இவர்களுடைய கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அதேபோல் நாம் தமிழர் கட்சி பாமக ஆகியவை கூட தீய சக்திகள் தான்.
அதை வைத்து பார்க்கும் போது திமுகவுக்கு இணையாக டிவிகே எழுச்சி பெறும். அப்படி நடக்கும் என்பது என்னுடைய எண்ணம் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பல வருடங்களாக தமிழ்நாட்டில் இரு பெரும் கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியை பிடிக்கின்றன.
அப்படி இருக்கும் போது விஜய்க்கு எந்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது கேள்விக்குறி தான். ஆனால் மக்களின் மனநிலை ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து கூட இருக்கலாம் என சில கருத்துக்கணிப்புகள் சொல்கிறது.